திருப்பூர்;டி.எம்.எப்., பகுதி சுரங்க பாலத்தில் தேங்கிய கழிவு நீர் அகற்றி, போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.கோர்ட் வீதியிலிருந்து லட்சுமி நகர் பகுதியை இணைக்கும் வகையில், ரயில் பாதை, ஊத்துக்குளி ரோடு பகுதிகளைக்கடந்து செல்லும் வகையில், சுரங்க பாலம் கட்டப்பட்டுள்ளது.மழைக் காலத்தில் இந்த பாலத்தின் கீழ் மழைநீரும், கழிவு நீரும் கலந்து தேங்கி நின்று பெரும் அவதி ஏற்படுகிறது. அண்மையில் பெய்த மழையால் பெருமளவு நீர் தேங்கி, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. எம்.எல்.ஏ., குணசேகரன், நேரில் சென்று ஆய்வு நடத்தி, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அதனடிப்படையில் நேற்று காலை பாலத்தின் கீழ் தேங்கியிருந்த நீர் முற்றிலும் அகற்றப்பட்டது. ரோட்டில் தேங்கிக்கிடந்த மண் மற்றும் சேறு அகற்றும் பணி நடந்தது.தேங்கி நின்ற கழிவு நீர் முற்றிலும் அகற்றப்பட்டதால் அவ்வழியாக வாகனப் போக்குவரத்து மீண்டும் துவங்கியது.இதைத் தொடர்ந்து பாலம் அருகேயுள்ள கழிவு நீர் தேக்க தொட்டியில் தேங்கியுள்ள சேறு மற்றும் கழிவுகள் அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.அதில் உள்ள கழிவு நீர் முற்றிலும் அப்புறப்படுத் தும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொட்டியில் உள்ள கழிவுகள் காய்ந்த பின் இரண்டொரு நாளில் அதை முற்றிலும் அகற்றி, சுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.பாலத்தின் கீழ் தேங்கும் நீரை அகற்றும் மோட்டாரை, சேறுடன் அகற்றும் மோட்டாராக மாற்றி, இதை பராமரிக்கும் பணியை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE