பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., இல்லையேல் தமிழக அரசியல் இல்லை: மாநில தலைவர் முருகன் பேச்சு

Added : ஜன 08, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பரமக்குடி : தமிழகத்தில் பா.ஜ., இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என, மாநில பா.ஜ., தலைவர் முருகன் பரமக்குடி அருகேயுள்ள சத்திரக்குடியில் பேசினார்.அவர் பேசியதாவது: தமிழகத்தில் பா.ஜ., எங்கே என்று கேட்டனர். கை, கால்களை ஊன்றி எட்டி உதைக்கும் அளவில் வளர்ந்துள்ளது. பா.ஜ., இல்லையெனில் தமிழக அரசியல் இல்லை.மூத்த நிர்வாகிகள் முதல் சாதாரண தொண்டன் வரை உழைத்து வருகிறார்கள்.தேசத்தின்
BJP,Bharatiya Janata Party,Murugan,பாஜ

பரமக்குடி : தமிழகத்தில் பா.ஜ., இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என, மாநில பா.ஜ., தலைவர் முருகன் பரமக்குடி அருகேயுள்ள சத்திரக்குடியில் பேசினார்.

அவர் பேசியதாவது: தமிழகத்தில் பா.ஜ., எங்கே என்று கேட்டனர். கை, கால்களை ஊன்றி எட்டி உதைக்கும் அளவில் வளர்ந்துள்ளது. பா.ஜ., இல்லையெனில் தமிழக அரசியல் இல்லை.மூத்த நிர்வாகிகள் முதல் சாதாரண தொண்டன் வரை உழைத்து வருகிறார்கள்.

தேசத்தின் வளர்ச்சியே நம் வளர்ச்சி என நினைத்துசெயல்படுகிறோம்.2012ல் நடந்த தாமரை சங்கமம் மாநாட்டில் எஸ்.சி., அணி மாநில தலைவராக இருந்த போது, 7 உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குலவேளாளர்கள் எனஅறிவிக்க தீர்மானம் நிறைவேற்றினோம். பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது அது நிறைவேறும் நிலையில் சட்டமும் தயாராகி வருகிறது. விரைவில் அறிவிப்பு வரும்.

தைப்பூச விழாவிற்கு அரசு விடுமுறை வழங்க கோரினோம். அது நிறைவேறி உள்ளது. வேல் யாத்திரைக்கு கிடைத்த வெற்றி அது. ஆன்மிக பூமியான இந்த மாவட்டத்தில் உள்ள, ராமநாத புரம், முதுகுளத்துார்,பரமக்குடி, திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் நம் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்ட மன்றத்திற்கு சென்றே தீருவார்கள், என்றார்.

மாவட்ட தலைவர் முரளிதரன், மாநில எஸ்.சி., அணி தலைவர் பாலகணபதி,தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் குப்பு ராமு, சுப.நாகராஜன், மாநில பொதுச்செயலாளர் நயினார் நாகேந்திரன், மாநில செயற்குழுஉறுப்பினர் நாகராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் குமார், மண்டலதலைவர் சண்முகராஜா, போகலுார் ஒன்றிய கவுன்சிலர்கள் கதிரவன்,காளிதால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.இன்று சத்திரக்குடியில் பா.ஜ., சார்பில் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி நடக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rao -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜன-202120:29:08 IST Report Abuse
rao Leaders of BJP both at centre and state are over confident with regards toelections in TN forgetting that strengthand cadre base.
Rate this:
Cancel
bigu -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜன-202107:40:07 IST Report Abuse
bigu உங்க பேச்சே அடாவடிதானமா இருக்கே
Rate this:
Cancel
VIJAYAKUMAR -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜன-202102:50:55 IST Report Abuse
VIJAYAKUMAR முதலில் வருகின்ற தேர்தலில் நோட்டாவை முந்து பிறகு பார்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X