திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், நேற்று திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி, உடுமலை அரசு மருத்துவமனை, பொங்கலுார் ஆரம்ப சுகாதார நிலையம், டி.எஸ்.கே., மற்றும் சரண் மருத்துவமனை என, ஐந்து இடங்களில், நேற்று 'கோவாக்சின்', 'கோவிஷீல்டு' ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கான ஒத்திகை நடந்தது.
ஒவ்வொரு மையத்திலும், மூன்று மணி நேரத்தில், 25 நபர்களுக்கு ஒத்திகை பார்க்கப்பட்டது. அரசு மருத்துவ கல்லுாரியில் நடந்த ஒத்திகையை மருத்துவ கல்லுாரி டீன் வள்ளி, கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:கொரோனா தடுப்பூசி, முதற்கட்டமாக, முன்கள பணியாளர்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவர்கள், ஆன்லைன் வாயிலாக தங்கள் விவரங்களை பதிவு செய்து, தடுப்பூசிக்கான ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும்.பதிவு செய்வோருக்கு, தடுப்பூசிக்கான நாள், நேரம், இடம் ஆகியவை, மொபைல் போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அந்த மையத்திற்கு, 'ஆதார்' அட்டையுடன் செல்ல வேண்டும்.தடுப்பூசி வளாகத்தில், உடல் வெப்ப பரிசோதனை செய்த பின், கிருமி நாசினி வாயிலாக, கைகளை சுத்தப்படுத்த வேண்டும். பின், குறுஞ்செய்தியை, பணியாளர்கள் பார்த்த பின், காத்திருப்பு அறையில், சமூக இடைவெளியுடன் அமர வேண்டும்.அங்கு, ஒவ்வொருவராக சென்று, டாக்டரிடம், ஆதார் மற்றும் மொபைல் போன் குறுஞ்செய்தியை காட்ட வேண்டும். அதில் உள்ள பதிவு எண்ணை வைத்து, கோவின் செயலியை பயன்படுத்தி, தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பதிவு செய்வர்.
அதை தொடர்ந்து, தடுப்பூசி பயனாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்படும்.தடுப்பூசி போட்டு கொண்டவர்கள், கண்காணிப்பு அறையில், 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். அவர்களின் ரத்த அழுத்தம் உள்ளிட்ட, சில அடிப்படை பரிசோதனை மேற்கொள்ளப்படும்.எவருக்கேனும் மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதை கள் ஏற்பட்டால், உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். அவ்வாறு எந்த உபாதைகளும் ஏற்படாதவர்கள், 30 நிமிடங்களுக்கு பின் வீட்டிற்கு செல்லலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE