பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் பறவை காய்ச்சல் அச்சம்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.கேரளாவில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மீன்கள் அதிகளவில் தினந்தோறும் கேரள மாநிலத்திற்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் அங்கிருந்து பழங்கள் கொண்டு வரப்படுகிறது. இங்குள்ள ஏர்வாடிக்கு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மீன்கள் அதிகளவில் தினந்தோறும் கேரள மாநிலத்திற்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் அங்கிருந்து பழங்கள் கொண்டு வரப்படுகிறது. இங்குள்ள ஏர்வாடிக்கு கேரளாவில் இருந்து தினமும் நுாறுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பலர் சுற்றுலாவாக வருகின்றனர். இவர்களுக்கு எந்த பரிசோதனைகளும் செய்வதில்லை.

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவும் நிலையில் தமிழக -கேரள எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை நடத்துகின்றனர். அதே நேரம் மாவட்டத்திற்குள்ளும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முறையாக கண்காணித்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும்.

கொரோனா தாக்கம் சற்று குறைந்த நிலையில், பன்றிக்காய்ச்சல் பீதியில் இருந்த ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு தற்போது பறவைக்காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. கோழி, முட்டை, பழங்கள் உள்ளிட்டவற்றை கேரளாவில் இருந்து ஏற்றி வரும் வாகனங்கள் மீது எல்லையில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதாகவும், எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம், என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.இருப்பினும், ஏர்வாடியில் சிறப்பு பரிசோதனை மையம் அமைக்கவும், ஜப்பான் காடை, நாட்டுக்கோழி பண்ணைகள் கண்காணிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X