குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம்...

Added : ஜன 09, 2021
Share
Advertisement
சொறிநாய்களால் அச்சம்ஸ்ரீவில்லிபுத்துாரில் பல்வேறு தெருக்கள் மற்றும் பஜார் வீதிகளில் நோய்களால் பாதிக்கபட்ட சொறிநாய்கள் நடமாடி வருகிறது. இவற்றை பிடித்து அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.-நாராயணகுமார், ஸ்ரீவில்லிபுத்துார்.விரைவில் நடவடிக்கைநோய் பாதிப்புடன் திரியும் நாய்களை பிடிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.-சரவணன், சுகாதார ஆய்வாளர்,

சொறிநாய்களால் அச்சம்

ஸ்ரீவில்லிபுத்துாரில் பல்வேறு தெருக்கள் மற்றும் பஜார் வீதிகளில் நோய்களால் பாதிக்கபட்ட சொறிநாய்கள் நடமாடி வருகிறது. இவற்றை பிடித்து அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.-நாராயணகுமார், ஸ்ரீவில்லிபுத்துார்.

விரைவில் நடவடிக்கை

நோய் பாதிப்புடன் திரியும் நாய்களை பிடிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.-சரவணன், சுகாதார ஆய்வாளர், ஸ்ரீவி., நகராட்சி.

ஆகாய தாமரைகளால் மாசு

குல்லுார்சந்தை அணையின் ஒரு பகுதியில் ஆகாய தாமரைகள் அதிகளவு வளர்ந்து வருவதால் தண்ணீர் மாசடைகிறது. இதை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.- காமாட்சி, விருதுநகர்.

விரைவில் அகற்றப்படும்

விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பாத்திமா நகரில் இருந்து சமீபத்தில் பெய்த மழை நீர் ஆகாய தாமரைகளை குல்லுார்சந்தை அணை வரை இழுந்து வந்து விட்டது. நகராட்சி உதவியுடன் ஆகாய தாமரைகள் அகற்றப்படும்.- முத்துச்சாமி, உதவி பொறியாளர், பொதுப்பணித்துறை, விருதுநகர்.

மேம்பாலத்தில் பள்ளம்

விருதுநகர் அரசு மருத்துவமனை மேம்பாலத்தின் பல இடங்களில் பள்ளங்கள் இருப்பதால் டூவீலர்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேடு, பள்ளங்களை சரி செய்ய வேண்டும்.- முபாரக் மந்திரி, பாண்டியன்நகர்.

மழை முடிந்ததும் பணி

மேம்பாலங்கள், சாலைகளை புனரமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. மழை முடிந்ததும் பணிகள் துரிதமாக நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.- முருகேசன், கோட்ட செயற்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை, விருதுநகர்.

செயல்படாத சுகாதார வளாகம்

சாத்துார் வடக்கு ரத வீதியில் காளியம்மன் கோயில் எதிரில் பொது சுகாதார வளாகம் செயல்படாமல் பூட்டி கிடக்கிறது. இதை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாரிக்கண்ணன் சாத்துார்.

நடவடிக்கை எடுக்கப்படும்

வடக்கு ரத வீதியில் பொது சுகாதார வளாகத்தை புதியதாக கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்படும்.ராஜமாணிக்கம், நகராட்சி கமிஷனர், சாத்துார்.

பெயர்ந்து கிடக்கும் பேவர் பிளாக் ரோடு

ஸ்ரீவில்லிபுத்துார் கீழபட்டி பிள்ளையார் கோயில் தெரு பேவர் பிளாக் ரோடு பெயர்ந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். ரோட்டை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.முத்துக்குமார், ஸ்ரீவில்லிபுத்துார்.

புகாரளித்தால் நடவடிக்கை

பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக புகாரளித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுரேஷ், நகராட்சி பொறியாளர், ஸ்ரீவில்லிபுத்துார்.

சேதமடைந்த ரோடால் சிரமம்

சிவகாசி பள்ளப்பட்டி - நாரணாபுரம் இணைப்பு ரோடு சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். ரோட்டை சீரமைத்து தர ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சகுந்தலா, பள்ளப்பட்டி.

நடவடிக்கை எடுக்கப்படும்

சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.உசிலை செல்வம், ஊராட்சி தலைவர், பள்ளப்பட்டி.

கண்மாயில் குப்பை

சிவகாசி பள்ளப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கடம்பன்குளம் கண்மாயில் குப்பையை கொட்டி நீராதாரத்தை அழித்து வருகின்றனர். கண்மாயை மாசடைய செய்வோர் மீது நடவடிக்கை எடுத்து கண்மாயை புனரமைக்க வேண்டும்.- ஸ்டெல்லா மேரி, பள்ளபட்டி.

கண்மாய் புனரமைப்பு உறுதி

கண்மாயில் குப்பை கொட்டுவது தடுக்கப்படும். கண்மாயை புனரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.- உசிலை செல்வம், தலைவர், பள்ளபட்டி ஊராட்சி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X