சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேன் கவிழ்ந்து மூன்று பேர் பலி

Added : ஜன 09, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் இருந்து மைசூரு சென்ற வேன் கவிழ்ந்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் இறந்தனர்; 14 பேர் காயமடைந்தனர்.திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுாரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், 70. இவர், மனைவி அமராவதி, 60, மகள் கோகிலா, 45, மற்றும் உறவினர்கள் என, 17 பேர் டெம்போ டிராவலர் வேனில், கர்நாடக மாநிலம், மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்றனர்.வேன், நேற்று அதிகாலை, கர்நாடக

திருப்பூர்:திருப்பூரில் இருந்து மைசூரு சென்ற வேன் கவிழ்ந்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் இறந்தனர்; 14 பேர் காயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுாரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், 70. இவர், மனைவி அமராவதி, 60, மகள் கோகிலா, 45, மற்றும் உறவினர்கள் என, 17 பேர் டெம்போ டிராவலர் வேனில், கர்நாடக மாநிலம், மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்றனர்.வேன், நேற்று அதிகாலை, கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் கிழக்கு, ஸ்வர்ணாவதி அணை அருகே சென்றபோது, நிலை தடுமாறி, பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், சுப்பிரமணி, அமிர்தா, கோகிலா பலியாயினர். டிரைவர் அருண்குமார் உட்பட, 14 பேர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார், அவர்களை மீட்டு, சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X