அபாயம், கண்ணுக்கு தெரியாது! காலேஜ் ரோட்டில் பாதாள குழிகள்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூர் புஷ்பா சந்திப்பிலிருந்து வஞ்சிபாளையம் செல்லும் வகையில் உள்ளது காலேஜ் ரோடு. ஐயப்பன் கோவில், கொங்கணகிரி கோவில், சிக்கண்ணா கல்லுாரி, தனியார் பள்ளிகள் ஆகியன இந்த ரோட்டில் அமைந்துள்ளன.இதுதவிர ஆயிரக்கணக்கான வீடுகள், நுாற்றுக்கணக்கான பனியன் உற்பத்தி மற்றும் சார்பு நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், சிறுபூலுவபட்டி ரிங் ரோடு ஆகியன செல்லும் வாகனங்கள்;
 அபாயம், கண்ணுக்கு தெரியாது! காலேஜ் ரோட்டில் பாதாள குழிகள்

திருப்பூர்;திருப்பூர் புஷ்பா சந்திப்பிலிருந்து வஞ்சிபாளையம் செல்லும் வகையில் உள்ளது காலேஜ் ரோடு. ஐயப்பன் கோவில், கொங்கணகிரி கோவில், சிக்கண்ணா கல்லுாரி, தனியார் பள்ளிகள் ஆகியன இந்த ரோட்டில் அமைந்துள்ளன.இதுதவிர ஆயிரக்கணக்கான வீடுகள், நுாற்றுக்கணக்கான பனியன் உற்பத்தி மற்றும் சார்பு நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், சிறுபூலுவபட்டி ரிங் ரோடு ஆகியன செல்லும் வாகனங்கள்; தெக்கலுார், அவிநாசி பகுதிகள் செல்லும் வாகனங்கள் தினமும் ஆயிரக்கணக்கில் இந்த ரோட்டில் சென்று வருகின்றன.இந்த ரோட்டில், வஞ்சிபாளையம் முதல் சிறுபூலுவபட்டி ரிங் ரோடு வரை, 4வது திட்டக் குடிநீர் பிரதான குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது. இதனால், பெருமளவு ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.அணைப்பாளையம் பகுதியிலிருந்து புஷ்பா சந்திப்பு வரையிலான ரோட்டில் தற்போது ஏராளமான இடங்களில் ரோடு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அண்மையில் பெய்த மழையால் பல இடங்களில் ரோடு அரிக்கப்பட்டு, ஜல்லி பெயர்ந்து காணப்படுகிறது. இதில் பல பெரிய குழிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.இதனால், பெரியளவிலான குழிகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அவற்றில் வாகனங்களை விட்டு, விபத்து நேரிடுகிறது. இதனால், தினமும் பல வாகன ஓட்டிகள் விபத்துகளைச் சந்திக்கும் நிலை உள்ளது. மழை நீர் தேங்கி நிற்கும் குழிகள் சீரமைத்து, வாகனங்கள் விபத்தின்றி செல்ல வழி செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X