தவறி விழுந்து முதியவர் பலி
சிவகாசி: சிவன் கோயில் நந்தவன தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் 62. தச்சு வேலை கான்ட்ராக்ட் எடுத்து செய்து வந்தார். கோக்காலியில் ஏறி மரம் அறுக்கும் இயந்திரத்தால் பணி செய்த போது தவறி விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
நாய்களை கொன்று பெண்ணுக்கு மிரட்டல்
சிவகாசி: பெரிய பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பாப்பா 57. இவர் வளர்த்து வந்த இருநாய்கள் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தது. விசாரித்த போது அதே பகுதி செல்லசாமி 65, அவரது மகன் ஜெயக்கண்ணன் நாய்களை கொன்றதை ஒப்புக்கொண்டனர். இதோடு இதை போலவே உன்னையும் கொல்வோம் என கூறி பாப்பாவை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். நீதிமன்ற உத்தரவு படி மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திடீர் மோதல்; வெட்டு
சிவகாசி: திருத்தங்கல் மேலமாட விதியை சேர்ந்தவர் மாரிமுத்து 37. அதிவீரன்பட்டியில் உள்ள தனது தோட்டத்தில் ஆடு, மாடுகள் பராமரித்து வருகிறார். இவரின் மாடுகள் அருகிலுள்ள பாஸ்கரின் தோட்டத்தில் மேய்ந்ததாக கூறி பாஸ்கர் மற்றும் அடையாள தெரியாத நபர் மாரிமுத்துவை அரிவாளால் வெட்டினர். அப்போது பாஸ்கரை மாரிமுத்து கடித்தார். இதுபோல் அதேபகுதி சுப்புராஜ் தோட்டத்தில் இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தினார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
மூதாட்டி நகை மாயம்
விருதுநகர்: விருதுநகர் ஆமத்துார் போலீஸ் காலனியை சேர்ந்தவர் ரெங்கநாயகி 60. மகள் விஷ்ணு பிரியாவுடன் விருதுநகரில் உள்ள நகை கடையில் நகை வாங்கி கொண்டு அதை பர்ஸ்சில் வைத்தபடி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி சுற்று கடைகளில் பொருட்கள் வாங்கி கொண்டு ஆமத்துார் வந்தார். வீட்டில் வந்து பார்த்த போது பர்ஸ்சில் இருந்த இரண்டரை பவுன் நகை , ரூ.19,500 மாயமானது தெரிந்தது. பஸ்சில் வரும் போது திருடப்பட்டதா , கடைகளுக்கு செல்லும் போது தவறி விழுந்ததா என ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
போக்சோவில் இளைஞர் கைது
சாத்துார்: வெம்பக்கோட்டை அருகே அலமேலுமங்கைபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் 19. அதே ஊரை சேர்ந்த 15 வயது பெண்ணை மிரட்டி சில்மிஷம் செய்துள்ளார். சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் இளைஞரை கைது செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE