பொது செய்தி

தமிழ்நாடு

தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை நன்றி தெரிவித்து வழிபாடு

Added : ஜன 09, 2021
Share
Advertisement
பல்லடம்:தமிழகத்தில் தைப்பூச தினத்தன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பல்லடம் ஸ்ரீவிநாயகர் பாலதண்டாயுதபாணி கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தமிழ்நாடு முருக பக்தர் பேரவை சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பேரவை தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். ''தைப்பூச நாளில் கோவை, திருப்பூர், ஈரோடு,
 தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை நன்றி தெரிவித்து வழிபாடு

பல்லடம்:தமிழகத்தில் தைப்பூச தினத்தன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பல்லடம் ஸ்ரீவிநாயகர் பாலதண்டாயுதபாணி கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தமிழ்நாடு முருக பக்தர் பேரவை சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பேரவை தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். ''தைப்பூச நாளில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். தைப்பூச நாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என, கடந்த ஏழு ஆண்டாக வலியுறுத்தி வந்தோம். பக்தர்களின் கோரிக்கைக்கு இணங்க அரசு விடுமுறை அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி'' என பேரவை நிர்வாகிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X