விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 10 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது.
கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, மல்லாங்கிணர் ஆரம்ப சுகாதார நிலையம், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை, ஊரக ஆரம்ப சுகாதார நிலையம், விருதுநகர் ஏ.கே.பி.எஸ்., மருத்துவமனை, சிவகாசி அரசு மருத்துவமனை, வத்திராயிருப்பு குன்னுார் ஆரம்ப சுகாதார நிலையம், சாத்துார் நடுசூரங்குடி கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம், ராஜபாளையம் டி.பி., மில்ஸ் ஊரக ஆரம்ப சுகாதார நிலையம், சிவகாசி அருணா தனியார் மருத்துவமனை என 10 மையங்களில் சுகாதார ஊழியர்களை கொண்டு நடந்தது.
டாக்டர்கள் உட்பட 250 சுகாதார ஊழியர்கள் பங்கேற்றனர்.தடுப்பூசி போடும் மையங்களில் பதிவறை, காத்திருப்பு அறை, பயனாளிகள் பற்றிய தகவல்கள் உறுதிப்படுத்தும் அறை, தடுப்பூசி போடும் அறை, தடுப்பூசி போட்ட நபர்களை 5 பேர் கொண்ட மருத்துவ குழு கண்காணிக்கும் அறை உள்ளன. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லாரி மருத்துவமனையில் நடந்த தடுப்பூசி ஒத்திகையை கலெக்டர் கண்ணன் பார்வையிட்டார். மருத்துவ இணை இயக்குனர் மனோகரன்.துணை இயக்கனர் ராம் கணேஷ் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE