திருப்பூர்:பின்னலாடை நிறுவன கழிவுகளை 'போகி' தினத்தில் எரிக்கக்கூடாது; அதிகாரிகள் குழு அன்று ஆய்வு நடத்த உள்ளது. தைப்பொங்கலுக்கு முந்தைய நாள், வரும் 13ம் தேதி, போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:போகி பண்டிகை நாளில், கிராமங்களில், விவசாய கழிவுகள், பழைய துணி, கிழிந்த பாய்களை எரிக்கின்றனர். ஆனால், திருப்பூர் போன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில், டயர், ரப்பர், பிளாஸ்டிக், பின்னலாடை உற்பத்தி நிறுவன கழிவுகளாக வெளியேறும் பேக்கிங் பிளாஸ்டிக் உறைகள், எம்ப்ராய்டரி கழிவு, போம் கழிவு, பழைய ஒயர்களை எரிக்கின்றனர். இதனால், புகை மூட்டம் ஏற்படுகிறது.மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல், நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. நச்சு புகையால், வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, சுவாசிக்கும் காற்றில் நச்சு பொருட்களின் அளவு அதிகரிக்கிறது.போகி பண்டிகை நாளில், டயர், பிளாஸ்டிக், ரப்பர், தொழிற்சாலை கழிவுகளை எரிக்க கூடாது; அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்துவர். கழிவுகளை எரிப்போர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புகை இல்லாதவகையில் போகி பண்டிகையை கொண்டாடவேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE