தேவாரம் : கோம்பை மலையடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் இரவில் தோட்டங்களில் தொழிலாளர்கள் தங்க வனத்துறை தடை விதித்துள்ளது.
தேவாரம் அருகே கோம்பை சுரத்மெட்டு அடிவாரம் கோட்டமலை பகுதியில் சமீபத்தில் யானைகள் தென்னை உள்ளிட்டவற்றை சேதப்படுத்தின. தேவாரம் வனப்பகுதி 18 ம் கால்வாயை ஒட்டியுள்ள தோட்டங்களில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை செங்கரும்புகள், வட்ட ஓடைப்பகுதியில் தென்னை மரங்கள், தோட்டத்தில் பயிரிட்டிருந்த மரவள்ளி கிழங்குகளை சேதப்படுத்தியது. ஒற்றை யானை தாக்கியதில் இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் தேவாரத்தில் இருந்து இடம் பெயர்ந்த இரண்டு யானைகள் தற்போது கோம்பை 18 ம் கால்வாய் அருகே கோட்டைமலை பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளன. அவை தோட்டப்பயிர்களை சேதப்படுத்தாத வகையில் வனத்துறையினர் ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். யானைகள் நடமாட்டத்தால் அப்பகுதி தோட்டங்களில் இரவில் தொழிலாளர்கள் தங்க தடை விதித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE