திருப்பூர்;ஜி.எஸ்.டி., சட்டம் 2017ன் கீழ், அனைத்து வர்த்தகர்களும், மாதம்தோறும் ரிட்டர்ன் தாக்கல் செய்து வருகின்றனர். ஆண்டுக்கு 5 கோடிக்கு கீழ் வர்த்தம் செய்யும் வர்த்தகர்களுக்கு, மாதம்தோறும் ரிட்டர்ன் தாக்கல் செய்வதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இத்தகைய வர்த்தகர்கள், வரி தொகையை மட்டும் மாதம்தோறும் செலுத்தவேண்டும்; காலாண்டுக்கு ஒருமுறை மட்டும் ரிட்டர்ன் தாக்கல் செய்தால் போதும் என்ற புதிய நடைமுறை, கடந்த 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.புதிய நடைமுறை குறித்து விளக்கம் அளிக்கும் கருத்தரங்கம், திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள, வணிக வரித்துறை துணை கமிஷனர் அலுவலக அரங்கில், வரும் 11 ம் தேதி(நாளை மறுநாள்) காலை 11:00 மணிக்கு நடக்கிறது. வணிக வரி துணை கமிஷனர் சங்கரநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசுகின்றனர். வர்த்தகர்கள், கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE