பொது செய்தி

தமிழ்நாடு

பறவை காய்ச்சல் தீவிரம்: கோழி வியாபாரிகளுக்கு அறிவுரை

Added : ஜன 09, 2021
Share
Advertisement
பந்தலுார்;கேரளாவில் பறவை காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநில எல்லையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கேரளா மாநிலத்தில் பறவை காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது. தமிழக-கேரள எல்லையில் நோய் பரவாமல் தடுக்கும் வகையில், மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், மண்டல இணை இயக்குனர் பகவத்சிங் தலைமையிலான மருத்துவ குழுவினர்,

பந்தலுார்;கேரளாவில் பறவை காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநில எல்லையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கேரளா மாநிலத்தில் பறவை காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது. தமிழக-கேரள எல்லையில் நோய் பரவாமல் தடுக்கும் வகையில், மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், மண்டல இணை இயக்குனர் பகவத்சிங் தலைமையிலான மருத்துவ குழுவினர், சுகாதாரத்துறையினர் ஆய்வு மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், தாளூர், எருமாடு, சேரம்பாடி, அய்யன்கொல்லி சுற்றுவட்டார கோழி இறைச்சி விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மேலும், சோதனைச் சாவடிகள் இல்லாமல், தமிழகம் வர பயன்படுத்தப்படும், குறுக்கு சாலைகளில் பாதுகாப்பு ஏற்ப்படுத்தவும், இந்த வழிகளில் கோழி ஏற்றிய வாகனங்கள் வருவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் கனயேந்திரன் தலைமையிலான குழுவினரும், கோழி கடைகாரர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X