இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஜன 09, 2021 | Added : ஜன 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்விஷ சாராயம் குடித்த 5 பேர் பலிலக்னோ: உத்தர பிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டம் ஜீத்கலி பகுதியில், நேற்று முன்தினம் குல்தீப் என்பவரிடம் சாராயம் வாங்கி குடித்த ஐந்து பேர் பலியாயினர்; பாதிக்கப்பட்ட, 16 பேர் சிகிச்சையில் உள்ளனர். தலைமறைவான குல்தீபை போலீசார் தேடுகின்றனர்.. நடிகை கங்கனா ஆஜர்மும்பை: சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பியதாக, பாலிவுட்
today crime roundup, இன்றைய, கிரைம், ரவுண்ட்அப்


இந்திய நிகழ்வுகள்விஷ சாராயம் குடித்த 5 பேர் பலி

லக்னோ: உத்தர பிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டம் ஜீத்கலி பகுதியில், நேற்று முன்தினம் குல்தீப் என்பவரிடம் சாராயம் வாங்கி குடித்த ஐந்து பேர் பலியாயினர்; பாதிக்கப்பட்ட, 16 பேர் சிகிச்சையில் உள்ளனர். தலைமறைவான குல்தீபை போலீசார் தேடுகின்றனர்.

. நடிகை கங்கனா ஆஜர்

மும்பை: சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பியதாக, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மீது, மும்பை போலீசார், தேசதுரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த விசாரணைக்காக, பாந்த்ரா போலீஸ் ஸ்டேஷனில், நேற்று அவர் ஆஜரானார்.


latest tamil news


ஒடிசா முதல்வர் உயிருக்கு கூலிப்படை அச்சுறுத்தல்

புவனேஸ்வர்:ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வந்துள்ள கடிதத்தை அடுத்து, அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி அமைந்து உள்ளது.முதல்வரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் கடிதம், சமீபத்தில், அவரது முகவரிக்கு வந்துள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள, கடிதத்தின் விபரம்:

சில கூலிப்படையினர், தங்களை கொலை செய்ய உள்ளனர் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். தொழில்முறை கொலையாளிகளான அவர்கள், 'ஏகே' மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் வாயிலாக இந்த தாக்குதலை நடத்துவர். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கொல்லப்படலாம் என்பதால் கவனமாக இருக்கவும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது. இதையடுத்து, முதல்வருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கடிதம் குறித்தும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


latest tamil news


அரிதான கங்கை நதி டால்பினை அடித்துக் கொன்ற உ.பி., கும்பல்

பிரதாப்கர்: உலகின் மிக அரிதான உயிரினங்களில் ஒன்றான கங்கை நதி டால்பினை, உத்தர பிரதேசத்தில் முட்டாள் இளைஞர் கும்பல் ஒன்று கட்டை மற்றும் கோடரியால் தாக்கி கொன்றது. அந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.


தமிழக நிகழ்வுகள்

ரூ.1.25 லட்சம் திருடியவரை நைய புடைத்த 'பார்' ஊழியர்கள்

மதுரவாயல்: மதுரவாயலில் உள்ள, 'பார்' ஒன்றில், கல்லா பெட்டியை உடைத்து, 1.25 லட்சம் ரூபாய் திருடிய நபரை, போலீசார் கைது செய்தனர்.மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும், 'டாஸ்மாக்' கடையில், பிரவீன் குமார் என்பவர் 'பார்' நடத்தி வருகிறார். ஐந்துக்கும் மேற்பட்ட, ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.நேற்று இரவு, வியாபாரம் முடிந்து கல்லா பெட்டியில், 1.25 லட்சம் ரூபாய் வைத்து, ஊழியர்கள் பக்கத்து அறையில் துாங்கிக் கொண்டிருந்தனர்.நள்ளிரவில், கல்லாப்பெட்டி உடைக்கும் சத்தம் கேட்டதையடுத்து, ஊழியர்கள் எழுந்து பார்த்தனர்.மர்ம நபர் ஒருவர், கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடி, தப்ப முயன்றது தெரிய வந்தது. சுதாரித்த ஊழியர்கள், அந்த நபரை பிடித்து, சரமாரியாக தாக்கி, மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், பிடிபட்டவர், மதுரவாயலைச் சேர்ந்த பாலன், 24, என, தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

வெடிகுண்டு மிரட்டலால் சென்னையில் பரபரப்பு

சென்னை: சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் மருத்துவமனைக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால், பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று அதிகாலை, 4:56 மணிக்கு, போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில், குண்டு வெடிக்கப் போவதாக கூறி, இணைப்பை துண்டித்தார்.உடனடியாக தகவல், எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலைய போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் சென்னை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனடியாக, சென்னையில் உள்ள, முக்கிய ரயில் நிலையம் மற்றும் ராஜிவ் காந்தி, கீழ்பாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட, அரசு மருத்துவமனைகளிலும், அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.பல மணி நேரம் ஆய்வில், வெடிகுண்டு எதுவும் சிக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

போதை' ரேஷன் ஊழியரிடம் ஆட்டை: ரூ.5 லட்சத்துடன் தப்பியோருக்கு வலை

சென்னை: சென்னையில் ரேஷன் கடை ஊழியரிடம், 5 லட்சம் ரூபாய் பறித்து தப்பிய, பெண்கள் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

103 கிலோ தங்கம் திருட்டு தடய அறிவியல் துறை ஆய்வு

சென்னை:சி.பி.ஐ., வசமிருந்த, 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட சுரானா நிறுவனத்தில், தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

சாராயம் கடத்தியவர் கைது

சிதம்பரம் : புதுச்சேரியிலிருந்து மினி வேனில் சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


உலக நிகழ்வுகள்


latest tamil news
கொடி ஏந்தியதற்கு விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள, 'கேப்பிடோல்' எனப்படும், அமெரிக்க பார்லிமென்ட் கட்டடத்திற்கு வெளியே நடந்த வன்முறையின்போது, ஒருவர், இந்திய தேசியக் கொடியை ஏந்தி நின்றது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நபரின் அடையாளம் தற்போது தெரியவந்துள்ளது. விர்ஜீனியாவில் வசித்துவரும் அவரது பெயர், வின்சன்ட் சேவியர், 54. இதுகுறித்து அவர் கூறுகையில், “அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள், இனவெறி பிடித்தவர்கள் இல்லை என்பதை காட்டவே, நம் தேசியக் கொடியை வைத்திருந்தேன்,” என்றார்.

போலீஸ் அதிகாரி பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில், 'கேப்பிடோல்' வளாகத்தில் ஏற்பட்ட வன்முறையில், நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் உட்பட, பலர் படுகாயம்அடைந்தனர். இதில், காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பிரையன் சிக்னிக் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர், நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை, ஐந்தாக உயர்ந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
09-ஜன-202109:23:59 IST Report Abuse
S. Narayanan Who told to drink these.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X