ஆனைமலை:ஆனைமலை, ஆலாங்கடவு அரசுப்பள்ளியில், மேலாண்மைக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.ஆனைமலை, ஆலாங்கடவு அரசு துவக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பகவதி நாராயணன், ஆசிரியர் சிவராம் ஆனந்த் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பள்ளியில், மாணவர் சேர்க்கை அதிகரித்தல், பள்ளியின் வளர்ச்சிக்கு தேவைப்படும் கட்டமைப்புகள், வீடுகளில் மாணவர்களின் கல்வி கற்கும் முறை, மாணவர்களின் பாதுகாப்பு, 'போக்சோ' சட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கழிப்பிடம் கட்டுதல், அடிப்படை கட்டமைப்புகள் உட்பட பல கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE