பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கலோ... பொங்கல் அறுவடைத்திருவிழா

Added : ஜன 09, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி ஜோதிநகர் நட்சத்திர பூங்காவில் அறுவடைத்திருவிழா நடந்தது. அறுவடைக்கு முன் பொங்கல் வைத்து, விநாயகப்பெருமானுக்கு வழிபாடு செய்து அறுவடையை துவங்கினாங்க.பொங்கல் வழிபாடு நிகழ்ச்சிக்கு வந்த சிறுவர்கள், 'பொங்கல் பண்டிகை'ன்னா என்னம்மா கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கனு கேட்டாங்க. அங்க இருந்த முதியவர் ஒருவர், 'பொங்கல் பண்டிகைன்னா, தமிழர்கள் விமரிசையாக கொண்டாடும்
 பொங்கலோ... பொங்கல் அறுவடைத்திருவிழா

பொள்ளாச்சி ஜோதிநகர் நட்சத்திர பூங்காவில் அறுவடைத்திருவிழா நடந்தது. அறுவடைக்கு முன் பொங்கல் வைத்து, விநாயகப்பெருமானுக்கு வழிபாடு செய்து அறுவடையை துவங்கினாங்க.பொங்கல் வழிபாடு நிகழ்ச்சிக்கு வந்த சிறுவர்கள், 'பொங்கல் பண்டிகை'ன்னா என்னம்மா கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கனு கேட்டாங்க. அங்க இருந்த முதியவர் ஒருவர், 'பொங்கல் பண்டிகைன்னா, தமிழர்கள் விமரிசையாக கொண்டாடும் பண்டிகை.கால்நடைகளுக்கும், இயற்கைக்கும் நன்றி சொல்லும் விதமா இந்த பண்டிகைய கொண்டாடுறோம். பொங்கலுக்கு ஒரு வாரத்துக்கு முன், வீட்டை சுத்தம் செய்து வெள்ளை அடித்தும் பண்டிகைக்கு தயாராகுவது வழக்கம்.வீடு மட்டுமின்றி, தெருக்களிலும் சாணத்தை தெளித்து, வண்ணக் கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி, பொங்கல் விழாவை வரவேற்பாங்க. பொங்கலுக்கு முந்தைய நாள் போகி பண்டிகை, 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என சொல்லுவாங்க. தீய பழக்கங்களை அழித்து, புதிய நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.இதற்காக வீட்டுல, ஆவாரம்பூ, பூளைப்பூ, மாவிலை, வேப்பிலை, எருக்கந்தலை கொண்டு, 'காப்பு' கட்டி விழா கொண்டாட்டம் துவங்கும். தை முதல் நாளில், சூரிய பொங்கல் வைத்து, இயற்கைக்கும், இறைவனுக்கும் நன்றி சொல்லும் விதமாக கொண்டாடுவோம்.பொங்கல் பொங்கி வர்றப்ப, கூட்டமாக நின்னு தாரதப்பட்டை அடித்து, 'பொங்கலோ... பொங்கல்'னு குலவை எழுப்பி வழிபாடு செய்வாங்க. அடுத்த நாள், மாடுகளை சுத்தம் செய்து, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, மாட்டுப் பொங்கல் விழா நடக்கும். அப்போது, விவசாய நிலத்தில் பட்டி அமைத்து, தெய்வங்களுக்கும், கால்நடைகளுக்கும் பொங்கல் வைத்து, வழிபாடு செய்து, மாடு விரட்டும், தெப்பக்குளம் தாண்டுதலும் நடக்கும். கடைசி நாள், பூப்பொங்கல் விழா நடத்தப்படும். பெண்கள், கும்மியாடித்து பாரம்பரிய நடனம், மற்றும் பாடல்களை பாடி மகிழ்வதும் ஒரு விழாவாக இருக்கும். காலங்கலமா இருப்படித்தான் பொங்கல் விழா கொண்டாடிட்டு இருக்கோம். உறவுகளை சுமக்க கூடிய இந்த நிகழ்வு, இன்னும் பாரம்பரியம் மறக்காத சிலரால் கொண்டாடப்படுகிறது. நீங்களும், எதற்கு பண்டிகை கொண்டாடுறோம்னு தெரிஞ்சுகிட்டீங்களா.இந்த வருஷம், கொரோனா ஊரடங்கால, எல்லாரும் வீட்டிலேயே இருந்து உறவுகள தெரிஞ்சுக்கிட்டீங்க, பொங்கல் விழாவையும் மகிழ்ச்சியா கொண்டாடுங்க,' என்றார்.அப்போது, பொங்கல் பொங்கியதும், கோரசாக 'பொங்கலோ பொங்கல்' என, கொண்டாடி மகிழ்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X