பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் ஏழை பிராமண அர்ச்சகர்களை மணந்தால் ரூ.3 லட்சம் நிதியுதவி

Updated : ஜன 09, 2021 | Added : ஜன 09, 2021 | கருத்துகள் (82)
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடகாவில் ஏழை பிராமண அர்ச்சகர்களை திருமணம் செய்யும் 25 பிராமண மணப்பெண்களுக்கு, ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.அருந்ததி மற்றும் மைத்ரேய் என்ற இரண்டு திருமண திட்டங்களை தொடங்க, கர்நாடக மாநில பிராமண மேம்பாட்டு வாரியம், மாநில அரசின் ஒப்புதலை பெற்றுள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் அர்ச்கர்களை திருமணம்
Karnataka, Brahmin, marriage schemes

பெங்களூரு: கர்நாடகாவில் ஏழை பிராமண அர்ச்சகர்களை திருமணம் செய்யும் 25 பிராமண மணப்பெண்களுக்கு, ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அருந்ததி மற்றும் மைத்ரேய் என்ற இரண்டு திருமண திட்டங்களை தொடங்க, கர்நாடக மாநில பிராமண மேம்பாட்டு வாரியம், மாநில அரசின் ஒப்புதலை பெற்றுள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் அர்ச்கர்களை திருமணம் செய்யும், 25 பிராமண பெண்களுக்கு, ரூ.3 லட்சம் நிதி பத்திரங்கள் வழங்கப்படும் என்பது முதல் திட்டம். பொருளாதார ரீதியாக பலவீனமான குடும்பங்களைச் சேர்ந்த, 550 பெண்களின் திருமணத்திற்கு தலா ரூ.25,000 நிதி உதவி வழங்குவது என்பது இரண்டாவது திட்டம்.


latest tamil news



இதுகுறித்து பிராமண மேம்பாட்டு வாரியத் தலைவர் சச்சிதானந்த மூர்த்தி கூறுகையில், 'அருந்ததி, மைத்ரேய் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள மாநில அரசு, அதற்கு நிதி ஒதுக்கி உள்ளது. சமூகத்தில் பலவீனவர்களுக்கு உதவும் வகையில் எங்களது இந்த முயற்சி இருக்கும்' என்றார். கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்கள் தொகையில், சுமார் 3 சதவீதம் பேர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா
12-ஜன-202105:17:12 IST Report Abuse
Varatharaajan Rangaswamy மிகவும் நல்ல, பாராட்டப்பட வேண்டிய முயற்சி கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்களும் தங்கள் வேலையின் புனிதத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.
Rate this:
Cancel
கொடுக்கு - Ang Mo Kio ,சிங்கப்பூர்
09-ஜன-202117:10:56 IST Report Abuse
கொடுக்கு அப்புறம் என்ன “ஐகோர்ட்டுக்கு “முன்னேறிய வகுப்பினர் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள் , எதில் முன்னேறினார்கள் .
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
10-ஜன-202103:53:46 IST Report Abuse
தல புராணம்அடுத்தவன் பொழைப்பை கெடுப்பதில்.....
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
09-ஜன-202114:53:26 IST Report Abuse
Vena Suna அவர்கள் வருமானம் கம்மி....கொடுப்பது தேவை....இல்லையேல் அந்த வேலைக்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள்...
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
10-ஜன-202103:54:53 IST Report Abuse
தல புராணம்தேவையற்ற வேலை.. அவர்களே உதவ முன்வராதபோது எதற்கு அரசு முட்டுக்கொடுக்க வேண்டும்.? இந்த சமூகத்தால் நசுக்கப்பட்டு அழிந்தவர்களுக்கு உதவலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X