பொது செய்தி

தமிழ்நாடு

சினிமா தியேட்டர்களில் நெரிசல்:வைரஸ் தொற்று பரவுவது உறுதி

Added : ஜன 09, 2021
Share
Advertisement
சினிமா தியேட்டர்களில், 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்கும் தமிழக அரசு உத்தரவு, நேற்று ரத்து செய்யப்பட்டு, 50 சதவீதம் பார்வையாளர்களுடன் செயல்பட உத்தரவிட்டுள்ளது. ஆனால், பண்டிகை காலத்தில், ரசிகர்கள் கூட்டமாக திரள்வதால், தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.நோய்த்தொற்று பரவும்கொரோனா பாதித்தவருக்கு அருகில், 30 நிமிடம் இருந்தாலே, 75 - 100 சதவீதம்
 சினிமா தியேட்டர்களில் நெரிசல்:வைரஸ் தொற்று பரவுவது உறுதி

சினிமா தியேட்டர்களில், 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்கும் தமிழக அரசு உத்தரவு, நேற்று ரத்து செய்யப்பட்டு, 50 சதவீதம் பார்வையாளர்களுடன் செயல்பட உத்தரவிட்டுள்ளது. ஆனால், பண்டிகை காலத்தில், ரசிகர்கள் கூட்டமாக திரள்வதால், தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.நோய்த்தொற்று பரவும்கொரோனா பாதித்தவருக்கு அருகில், 30 நிமிடம் இருந்தாலே, 75 - 100 சதவீதம் தொற்று பரவ சாத்தியக்கூறு உள்ளது. மூன்று மணி நேரம் தியேட்டருக்குள், தனிமனித இடைவெளி இல்லாமல், சுவாசிக்கும் காற்று கூட வெளியேற வழியில்லாமல் அடைக்கப்பட்டிருக்கும். இதனால், நோய் தொற்று எளிதில் பரவி, அதிகப்படியானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்படும் என்பதை உணர வேண்டும்.டாக்டர் கணேசன்,பிரணவ்ஸ் ஆர்த்தோகேர், உடுமலை.ஆபத்தான விஷயம்தியேட்டர்களில் பாதியளவு பார்வையாளர்களை அனுமதிப்பதும் ஆபத்தான விஷயம். காற்றோட்டம், விசாலமான இருக்கை வசதி இல்லை. ஏ.சி., இருந்தாலும், மூச்சுக்காற்று வெளியேறும் வசதிகள் இல்லை. ஒருவர் விட்டு, ஒருவர் அமரவைப்பதும் சரியானதல்ல; நோய் தொற்று பரவும் என மற்ற நாடுகளிலுள்ள டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.டாக்டர் விஜய்கண்ணா,இந்தியன் மருத்துவமனை, உடுமலை.பாதுகாப்பு கேள்விக்குறிகொரோனாவுக்கு முழுமையான தடுப்பு மருந்து வரவில்லை. தற்போது, தியேட்டர்களில் கூட்டம் கூடுவது அறிவுபூர்வமான செயல் அல்ல. மக்கள் மத்தியில், கொரோனா இல்லை என்ற மாயத்தோற்றம் உருவாகும். இரண்டாம் அலையாக, உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தியேட்டர்களில், கூட்டம் கூடுவதை அனுமதித்தால், பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.டாக்டர் ராஜபாலன்,சி.கே., ஹாஸ்பிடல், மடத்துக்குளம்.கூட்டம் தவிர்க்கணும்!கொரோனா முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை; தினமும் பாதிப்புகள் பதிவாகிறது. அறிகுறி இல்லாமல் பாதித்தவர்களுடன், தியேட்டர்களில் அமர்ந்திருக்கும் போது, தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தியேட்டர்களில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும். புதிய வகை கொரோனாவும் பரவும் நிலையில், தியேட்டர்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.டாக்டர் மோகன், ஓய்வு பெற்ற மருத்துவக்கல்லுாரி பேராசிரியர், பொள்ளாச்சி.அதிவேகமாக பரவும்!தியேட்டர்களில் பார்வையாளர்கள், 50 சதவீதம் அமர்வதும் அபாயகரமானது. தியேட்டர் என்பது வெளிக்காற்று புகாதவாறு மூடப்பட்டிருக்கும். அங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர், சமூக இடைவெளியின்றி நெருக்கமாக அமருவார்கள். எத்தனை பேர் முக்கவசம் அணிவார்கள் என்பது கேள்விக்குறி. ஒருவருக்கு தொற்று இருந்தாலும், அதிவேகத்தில் எளிதாக பரவும்.டாக்டர் ராஜா,தலைமை மருத்துவர், கோட்டூர் அரசு மருத்துவமனை.பரிசோதனை அவசியம்!கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகும் சமயத்தில், தியேட்டர்களில் அதிக காட்சிகள் திரையிடுவதும், கூட்டம் அதிகமாக சேர்ப்பதும் தவறானது. கூட்டம் அதிகரிக்கும் போது, தொற்று பரவலும் அதிகரிக்கும். ஒரு ேஷா முடிந்ததும், கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்து, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தல் உள்ளிட்டவை முறையாக பின்பற்ற வேண்டும்.டாக்டர் வரதராஜ்,சிந்தியா மருத்துவமனை, பொள்ளாச்சி.சுய பாதுகாப்பு ரொம்ப முக்கியம்!சினிமா துறை, ஆயிரக்கணக்கான கோடிகள் புழங்கும் வர்த்தகம் என்பதால், தியேட்டரில் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொற்று பரவும் அபாயம் உள்ளது என்பதால், வயதானவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் தியேட்டருக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிந்து, பாதுகாப்புகளுடன் செல்வது அத்தியாவசியம். அரசை சார்ந்திராமல், தங்களை தாங்களே மக்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும்.டாக்டர் ஜெயமுருகன், பொது நல மருத்துவர், பொள்ளாச்சி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X