வால்பாறை:வால்பாறை வட்டார வியாபாரிகள், அனைத்து வணிகர்களின் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் வால்பாறை தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம், பொதுச்செயலாளர் சுரேஷ் தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் ஷாஜூ, சவுந்திரபாண்டியன், பாபுஜி உட்பட பலர் கலந்த கொண்டனர்.கூட்டத்தில், நிர்வாகிகள் பேசியதாவது:வால்பாறையில் சமீப காலமாக வனத்துறையினரின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது. சோதனைச்சாவடிகளில் வனத்துறையின் கெடுப்பிடியால், சுற்றுலா பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்து வருகிறது. வனத்துறை சார்பில், நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்ட சோதனைச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். வால்பாறையில் வசிக்கும் மக்களிடம், எஸ்டேட் பகுதிக்குள் நுழைய, 100 ரூபாய் கட்டணமாக வசூலிப்பது கண்டிக்கதக்கது.அரசு கொண்டு வரும் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை வனத்துறையினர் மறைமுகமாக தடுக்கின்றனர். வனத்துறையினரின் இந்த அத்துமீறலை கண்டித்து, பல்வேறு அமைப்புக்களின் சார்பில், விரைவில் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்படும், போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE