அன்னுார்:மாடித்தோட்டம் அமைக்க, தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.தோட்டக்கலை துறை சார்பில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில், ஒரு குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்ள, விதை பொட்டலங்கள் வழங்கப்படுகிறது. அவற்றுடன், இயற்கை உரங்களான அசோஸ்பைரில்லம், சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா, வேப்பெண்ணை மற்றும் மாடிப் பகுதியில் செடி வளர்க்க தேவைப்படும் பொருட்களும் வழங்கப்படுகின்றன. இதில், அரசு மானியம் 340 ரூபாய் போக, 510 ரூபாய் செலுத்தினால் போதும்.வீட்டை சுற்றி தோட்டம் அல்லது மாடி தோட்டத்தில், சொட்டு நீர் பாசனம் அமைக்க, 400 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மானியம் போக, 720 ரூபாய் செலுத்தினால் சொட்டுநீர் உபகரணங்களை பெற்றுக் கொள்ளலாம்.'இதில் பயன்பெற விரும்புவோர், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு நகல்கள் மற்றும் புகைப்படத்துடன், அன்னுார் வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகலாம். விபரங்களுக்கு 97919 98833, 95784 52676, 99433 66422 என்னும் மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்' என, தோட்டக்கலை உதவி இயக்குனர் மதுபாலா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE