பொது செய்தி

தமிழ்நாடு

தோல்வியை ரசி... வெற்றியை ருசி...!

Added : ஜன 09, 2021
Share
Advertisement
எ ந்த ஒரு மனிதனும் வாழ்க்கையில், தோல்வி அடைய வேண்டும் என்று சிந்திப்பதில்லை. வெற்றி வேண்டும்; எல்லாவற்றிலும் ஜெயிக்க வேண்டும்; முன்னேற வேண்டும் என்றுதான் நினைப்பு. ஆனால், அதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதில் ஏற்படும் கோளாறுகள் தான், பின்னுக்கு தள்ளி விடுகின்றன.வெற்றி பெற்ற மனிதர்களின் பழக்க வழக்கங்கள், குணங்கள், வாழ்க்கை நடைமுறைகள் கூர்ந்து, கவனித்து, அதை நம் வாழ்வில்
 தோல்வியை ரசி... வெற்றியை ருசி...!

எ ந்த ஒரு மனிதனும் வாழ்க்கையில், தோல்வி அடைய வேண்டும் என்று சிந்திப்பதில்லை. வெற்றி வேண்டும்; எல்லாவற்றிலும் ஜெயிக்க வேண்டும்; முன்னேற வேண்டும் என்றுதான் நினைப்பு. ஆனால், அதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதில் ஏற்படும் கோளாறுகள் தான், பின்னுக்கு தள்ளி விடுகின்றன.வெற்றி பெற்ற மனிதர்களின் பழக்க வழக்கங்கள், குணங்கள், வாழ்க்கை நடைமுறைகள் கூர்ந்து, கவனித்து, அதை நம் வாழ்வில் செயல்படுத்தினால், வெற்றிதேவதை நமக்கு மாலையிடுவாள். அனுபவம், ஒவ்வொரு மனிதனுக்கு கட்டாயம் வேண்டும். அந்த அனுபவ அறிவு, நம்முடைய ஒட்டு மொத்த வாழ்க்கையை சீர்படுத்தி, செப்பனிட்டு, நம்மை உயரத்துக்கு கொண்டு செல்லும். தோல்வியை ரசிக்க பழகுங்கள். அதுதான், வெற்றிக்கு கைபிடித்து அழைத்து செல்லும்.ஒவ்வொறு மனிதனின் மனதிலும் எழும் எண்ணங்களே, அவனுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்கு அடித்தளமாய் அமைகின்றன. எண்ணமே வாழ்வு என்று இதை குறிப்பிடலாம். வெற்றியடைய வேண்டும் என்று தீர்மானித்து விட்டால், எதிர்மறை எண்ணங்கள் கொண்ட நபர்களுடன், சற்று விலகி இருக்க வேண்டும்.அதாவது, முடியாது, நடக்காது, சாத்தியம் இல்லை என்று சொத்தை காரணங்கள் கூறி, காரியத்தை தள்ளிப்போட்டுக் கொண்டு அல்லது அதை விட்டு விலகி செல்லும் நபர்களை, நம் அருகில் அண்ட விடக்கூடாது. பொறாமை, சூது, வாது நிறைந்த நபர்களை விட்டு விலகி இருந்தல் வேண்டும்.வாழ்க்கையில் முன்னேற, நல்ல தொடர்புகள் அவசியம். தற்போது, நம்முடன் இருக்கும் நல்ல தொடர்புகளுடன், புதிய, புதிய நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் புதிய சிந்தனைகள், நல்ல பண்புகள் உருவாகும். இது நாம் வாழ்க்கையில் வெற்றி பெற, பெரிய உதவியாக இருக்கும்.கூச்சம், தயக்கம் என்பதை அறவே விட்டு விட வேண்டும். எத்தனையோ மனிதர்கள், அந்த நேரத்தில் நான் காட்டிய தயக்கம், என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டு விட்டது என்று கூற கேள்விபட்டிருப்போம். எங்கும், யாருடனும் பேச தயக்கம் கொள்ளக்கூடாது. புதிய, புதிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.வேகமாக மாறிவரும் டிஜிட்டல் உலகில் எத்தகைய தொழில் நுட்பத்தையும் உடனடியாக கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இவ்வுலகில் பின்தங்கியவர்களாக ஆகி விடுவோம். எல்லாவற்றையும் விட, யாரையும் தேவையில்லாமல் விமர்சனம் செய்யக் கூடாது. இது பல அற்புதமான வாய்ப்புக்களை இழக்க செய்யும்.என்னால் முடியும்... என்னால் முடியும்... என்ற தாரக மந்திரத்தை மனதில் ஆழமாக விதைத்து வைக்க வேண்டும். அது வளர்ந்து, தரும் பயன் மிக அற்புதமானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X