பொது செய்தி

தமிழ்நாடு

'கோடை சீசனுக்கு ஊட்டி சிறப்பு ரயில்'

Added : ஜன 09, 2021
Share
Advertisement
குன்னுார்:'சுற்றுலா பயணிகளின் வரவேற்பை பொறுத்து, கோடை சீசனுக்கு ஊட்டி சிறப்பு ரயில் இயக்கப்படும்' என, தெற்கு ரயில்வே சேலம் கோட்ட பொது மேலாளர் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம், ஊட்டி- குன்னுார் - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயில் பாதை மற்றும் ஹில் குரோவ், ரன்னிமேடு, குன்னுார் ரயில் நிலையங்களை, தெற்கு ரயில்வே சேலம் கோட்ட பொது மேலாளர்

குன்னுார்:'சுற்றுலா பயணிகளின் வரவேற்பை பொறுத்து, கோடை சீசனுக்கு ஊட்டி சிறப்பு ரயில் இயக்கப்படும்' என, தெற்கு ரயில்வே சேலம் கோட்ட பொது மேலாளர் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம், ஊட்டி- குன்னுார் - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயில் பாதை மற்றும் ஹில் குரோவ், ரன்னிமேடு, குன்னுார் ரயில் நிலையங்களை, தெற்கு ரயில்வே சேலம் கோட்ட பொது மேலாளர் சீனிவாஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.குன்னுாரில் ஊழியர்கள் சார்பில், ரயில்வேயின் சிறப்பு 'லோக்கோ கோட்' அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.சீனிவாஸ் நிருபர்களிடம் கூறுகையில்,''கடந்த, 31ம் தேதியில் இருந்து, மலை ரயில் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகளிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. கோடை சீசனில் சுற்றுலா பயணிகளின் வரவேற்பை பொறுத்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X