பொது செய்தி

தமிழ்நாடு

துணிப்பை இல்லாமல் பொங்கல் தொகுப்பு

Added : ஜன 09, 2021
Share
Advertisement
திருப்பூர்:துணிப்பையில், பொங்கல் தொகுப்பு வழங்குவதில்லை என புகார் எழுந்துள்ளது.ரேஷன் கார்டுதாரர்களுக்கு, சர்க்கரை, பச்சரிசி உட்பட பொங்கல் பரிசு தொகுப்புகளை, துணிப்பையில் வழங்க,47.46 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு ஒதுக்கியது. அதாவது, ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரருக்கும், 23 ரூபாய் மதிப்புள்ள துணிப்பையை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், பொங்கல் பரிசு

திருப்பூர்:துணிப்பையில், பொங்கல் தொகுப்பு வழங்குவதில்லை என புகார் எழுந்துள்ளது.ரேஷன் கார்டுதாரர்களுக்கு, சர்க்கரை, பச்சரிசி உட்பட பொங்கல் பரிசு தொகுப்புகளை, துணிப்பையில் வழங்க,47.46 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு ஒதுக்கியது. அதாவது, ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரருக்கும், 23 ரூபாய் மதிப்புள்ள துணிப்பையை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், பொங்கல் பரிசு பொருட்கள் வினியோகம் துவங்கிய இரண்டு நாட்களுக்கு மட்டும், துணிப்பை வழங்கப்பட்டது. தற்போது 'பை தீர்ந்துவிட்டது' என கூறி வருகின்றனர்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திருப்பூர் மண்டல மேலாளர் சக்திவேலிடம் கேட்டபோது, ''ஆர்டர் கொடுத்த நிறுவனங்களிடம் இருந்து, 70 சதவீத துணிப்பை வாங்கி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள துணிப்பையையும் வழங்கிவிடுவோம். கூட்டுறவு சங்கங்கள் ரேஷன் கடைகளில், துணிப்பை வழங்கப்படுவதில்லை என புகார் வந்தது. துணிப்பையை வழங்க உத்தரவிட்டுள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X