புதுடில்லி:இந்திய -- சீன எல்லையில் வீரர்கள் மத்தியில் தவறான புரிதல்கள் மற்றும் கணிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு கீழ்மட்டத்திலான தகவல் தொடர்பு பராமரிக்கப்படுகிறது' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா -- சீனா இடையிலான பேச்சு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நேற்று கூறியதாவது:இந்தியா -- சீனாவுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு குழுவினர் இடையிலான பேச்சு கடந்த மாதம் 18ல் நடந்தது.
அப்போது மூத்த கமாண்டர்கள் மட்டத்திலான அடுத்த கட்ட பேச்சை விரைவில் துவங்க இருதரப்பும் ஒப்புக் கொண்டது.அமைதியை ஏற்படுத்தும் பேச்சில் இருநாடுகளுக்கும் இடையிலான துாதரக மற்றும் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு தொய்வின்றி தொடர்கின்றன.
அதே நேரம் எல்லையில் வீரர்கள் மத்தியில் தவறான புரிதல்கள் மற்றும் கணிப்புகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக கீழ்மட்டத்திலான தகவல் தொடர்பு பரிமாற்றங்கள் பராமரிக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE