கோவை;சேவா பாரதி சார்பில் ராஜவீதி துணிவணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாளை ரத்ததான முகாம் நடக்கிறது.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஓர் அங்கமான சேவா பாரதி சார்பில், சமீபத்தில், இலவச மருத்துவ ஆலோசனை மையம் ஆர்.எஸ். புரம் சத்குரு சேவா ஆசிரமத்தில் துவங்கப்பட்டது. தொடர்ந்து, விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு, கங்கா மருத்துவமனையுடன் இணைந்து நாளை ரத்ததான முகாம் நடக்கிறது.ராஜவீதி துணிவணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நாளை காலை, 8:30 முதல் மதியம்,3:30 மணி வரை முகாம் நடக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள், 97902 50550, 98654 42211, 82207 57562 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.சேவா பாரதி மாநிலத் தலைவர் ராமநாதன் கூறுகையில்,''ஆண்டுதோறும் விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வரும், 10ம் தேதி (நாளை) நடக்கும் ரத்ததான முகாமில், 250 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE