பொது செய்தி

தமிழ்நாடு

'கறிக்கோழி உற்பத்தி குறைக்கப்படவில்லை'

Added : ஜன 09, 2021
Share
Advertisement
பல்லடம்:'பறவைக்காய்ச்சல் பாதிப்பு, கறிக்கோழிகளுக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை; உற்பத்தி குறைக்கப்படவில்லை' என்று, பல்லடம் கறிக்கோழி ஓருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.கேரளா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது; தமிழகத்தில் பரவாமல் தடுக்க, எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
 'கறிக்கோழி உற்பத்தி குறைக்கப்படவில்லை'

பல்லடம்:'பறவைக்காய்ச்சல் பாதிப்பு, கறிக்கோழிகளுக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை; உற்பத்தி குறைக்கப்படவில்லை' என்று, பல்லடம் கறிக்கோழி ஓருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.கேரளா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது; தமிழகத்தில் பரவாமல் தடுக்க, எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளர் சுவாதி கண்ணன் கூறியதாவது:திருப்பூர் மாவட்டம், பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் மூலம், வாரம், 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தியாகின்றன. தமிழகம் மட்டுமின்றி,'கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு, கறிக்கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. பறவைக் காய்ச்சலால் கறிக்கோழி உற்பத்தி குறைக்கப்படவில்லை.தமிழக அரசு நடவடிக்கையால் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கறிக்கோழிகள், அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றன. விவசாயிகள் போராட்டத்தால், கர்நாடகாவுக்கு கோழி கள் அனுப்புவது, ஓரிரு நாட்கள் தடைப்பட்டன. தற்போது கோழிகள் அங்கும் அனுப்பப்படுகின்றன.கோழிகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்படுவதால், பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X