வாஷிங்டன்: ஜன.20-ல் அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் நான் பங்கேற்கப்போவதில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே, ஜோ பைடன் வெற்றியை உறுதி செய்ய அமெரிக்க பார்லிமென்டின் கூட்டுக்குழுக் கூட்டம், சில தினங்களுக்கு முன் 'கேப்பிடோல்' கட்டடத்தின் முன் நடந்தது. இக்கட்டடத்திற்குள் திடீரென புகுந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், நான்கு பேர் இறந்தனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
![]()
|
இதற்கிடையில், ஜோ பைடன் வெற்றி பெற்றதாக பார்லிமென்ட் கூட்டுக்குழு அதிகாரப்பூர்வாக அறிவித்தது. வரும், 20ல், அமெரிக்காவின், 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் டிரம்ப் அளித்த பேட்டியில், வரும் இந்த வன்முறையை, நான் கண்டிக்கிறேன். வன்முறையை தடுத்து, பார்லிமென்ட் அமைந்துள்ள கட்டடத்ததை காப்பாற்ற, போலீசாருக்கு உத்தரவிட்டேன். வரும் 20-ம் தேதி ஜோ பைடன் பதவிறே்பு விழாவில் நான் பங்கேற்மாட்டேன் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE