அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொகுதி பங்கீடு தேர்தல் நேரத்தில் முடிவாகும்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
பெருங்குடி:'தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்,' என தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:தமிழக பா.ஜ., சார்பில் ஜன. 9,10ல் நம்ம ஊரு பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. தைப்பூச விழாவிற்கு விடுமுறை அளித்தற்கு தமிழக அரசுக்கு நன்றி.பா.ஜ., வேல் யாத்திரை நடத்தி அதன்மூலம் வைக்கப்பட்ட கோரிக்கையின் காரணமாகவே

பெருங்குடி:'தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்,' என தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:

தமிழக பா.ஜ., சார்பில் ஜன. 9,10ல் நம்ம ஊரு பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. தைப்பூச விழாவிற்கு விடுமுறை அளித்தற்கு தமிழக அரசுக்கு நன்றி.பா.ஜ., வேல் யாத்திரை நடத்தி அதன்மூலம் வைக்கப்பட்ட கோரிக்கையின் காரணமாகவே தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் ரஜினி ஆதரவு தெரிவித்தால் வரவேற்போம்.

அஞ்சல்துறை தேர்வில் தமிழ்மொழி சேர்க்கப்படும் என ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்து உள்ளது. விரைவில் சேர்க்கப்படும் என்றார்.அமித்ஷா ஜன. 13ல் சென்னை வரும்பட்சத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, 'அதிகாரபூர்வமான தகவல் ஏதும் கிடைக்கவில்லை,‛ என்றார்.

அ.தி.மு.க., கூட்டணியில் 40க்கும் மேற்பட்ட தொகுதிகள் கேட்டு பா.ஜ., நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, 'யூகங்களுக்கு பதில் கூறமுடியாது. தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X