மதுரை:மதுரை அவனியாபுரத்தில் கிராமக்குழு அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிடப்பட்டது.
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு முன் வழக்கறிஞர் கண்ணன் ஆஜராகி முறையிட்டதாவது: தைப்பொங்கலையொட்டி மதுரை அவனியாபுரத்தில் ஜன.,14 ல் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்காக பதிவு பெறாத ஒரு சங்கத்தை சேர்ந்தவர் உட்பட 7 பேர் கொண்ட குழுவை மதுரை கலெக்டர் அமைத்துள்ளார். குழுவில் இடம் பெற்றுள்ளவர் ஒருவர் கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டு விழா கணக்குகளை ஒப்படைக்கவில்லை.
இத்தகைய ஆட்சேபனைகளால் 2020 ல் இந்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்றம் உத்தர விட்டது.இம்முறை அவனியாபுரம் கிராம மக்கள் சார்பில் குழு அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்.
குழு அமைத்த கலெக்டரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அன்பரசன் என்பவர் மனு செய்கிறார். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றார். நீதிபதிகள், 'ஜன.,11 ல் விசாரிக்கப்படும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE