மதுரை:ராமேஸ்வரம் தங்கச்சிமடம் நல்லதம்பி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:தனுஷ்கோடி அரிச்சல்முனையில் கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சி நடத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது.
அரிச்சல்முனையில் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. இப்பகுதி முழுவதும் கடற்கரை மேலாண்மை மண்டலத்தின் கீழ் வருகிறது. இது பாதுகாக்க வேண்டிய பகுதி. அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் கட்டுமானத்தை அகற்ற வேண்டும். அங்கு பொது நிகழ்ச்சிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. அரசுத் தரப்பு, 'நிகழ்ச்சிக்கு கலெக்டர் அனுமதித்துள்ளார். எவ்வித இடையூறும் ஏற்படாது,' என தெரிவித்தது. நீதிபதிகள் தமிழக கடற்கரை மண்டல மேலாண்மை ஆணைய தலைவர், ராமநாதபுரம் கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி ஜன.,20 க்கு ஒத்திவைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE