கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கவுரவ விரிவுரையாளர்களுக்கு பொங்கல் போனஸ் கிடைக்குமா

Added : ஜன 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை:தமிழகத்தில் பிற துறைகள் போல் அரசு கல்லுாரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என அனைத்து அரசு கல்லுாரி யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்க மாநில தலைவர் தங்கராஜ் தெரிவித்துள்ளதாவது:அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரூ.15 ஆயிரம்

மதுரை:தமிழகத்தில் பிற துறைகள் போல் அரசு கல்லுாரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என அனைத்து அரசு கல்லுாரி யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்க மாநில தலைவர் தங்கராஜ் தெரிவித்துள்ளதாவது:அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்று கின்றனர். இவர்களுக்கு ஆண்டிற்கு 11 மாதங்கள் மட்டும் சம்பளம் வழங்கப்படும்.தற்போது கொரோனா பேரிடரால் ஆறு மாதங்களாக சம்பளம் வழங்குவது இழுத்தடிக்கப்படுகிறது. நவ., மற்றும் டிச., சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. பிற துறைகளில் உள்ளதுபோல் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பேராசிரியர், ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SANKAR - BHUVANAGIRI,இந்தியா
09-ஜன-202111:32:21 IST Report Abuse
SANKAR முதலில் இவர்களுக்கு ஊதியத்தை கொடுங்க ,பின்னர் போனஸ் தரலாம் , பத்து ஆண்டுகளாக இவர்களின் உழைப்பை உறிஞ்சி கொண்டு இவர்களை அற்ப பணத்தை சம்பளம் என சொல்லி இவர்களின் கவுரவத்தை குறைத்து ,தற்போது யு ஜி சி தகுதி என்று புது பித்தலாட்டம் காரணம் காட்டி நிரந்தர படுத்த முடியாத அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.இவர்களுக்கு தகுதி இல்லாமலா பத்து ஆண்டாக பனி செய்கிறார்கள் ,வேலை செய்யும் பொது தகுதி தெரியவில்லை ,ஊதியம் நிரந்திர பனி வேண்டும் சென்றால் தகுதி தானாக வந்து விடுகிறது ,இதற்க்கு தினமலர் தான் பதில் சொல்லி அரசுக்கு புரிய வைக்கணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X