கவுரவ விரிவுரையாளர்களுக்கு பொங்கல் போனஸ் கிடைக்குமா| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கவுரவ விரிவுரையாளர்களுக்கு பொங்கல் போனஸ் கிடைக்குமா

Added : ஜன 09, 2021 | கருத்துகள் (1)
Share
மதுரை:தமிழகத்தில் பிற துறைகள் போல் அரசு கல்லுாரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என அனைத்து அரசு கல்லுாரி யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்க மாநில தலைவர் தங்கராஜ் தெரிவித்துள்ளதாவது:அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரூ.15 ஆயிரம்

மதுரை:தமிழகத்தில் பிற துறைகள் போல் அரசு கல்லுாரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என அனைத்து அரசு கல்லுாரி யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்க மாநில தலைவர் தங்கராஜ் தெரிவித்துள்ளதாவது:அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்று கின்றனர். இவர்களுக்கு ஆண்டிற்கு 11 மாதங்கள் மட்டும் சம்பளம் வழங்கப்படும்.தற்போது கொரோனா பேரிடரால் ஆறு மாதங்களாக சம்பளம் வழங்குவது இழுத்தடிக்கப்படுகிறது. நவ., மற்றும் டிச., சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. பிற துறைகளில் உள்ளதுபோல் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பேராசிரியர், ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X