பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்...: மாவட்டம்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
சுவர் இடிந்து தொழிலாளி பலி கோவை சித்தாபுதுார் ஹரிபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகர், 40. கூலித்தொழிலாளி. தனது தாய் சரஸ்வதியுடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். இரவு, 12:00 மணியளவில் வீட்டின் மண் சுவர் மேற்கூரையுடன் இடிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் ராஜசேகர் உடல் நசுங்கி பலியானார். சரஸ்வதி சிகிச்சை பெற்று வருகிறார். தம்பதிக்கு ஜாமின் மறுப்பு கோவை, கிராஸ்கட் ரோட்டிலுள்ள ஒரு

சுவர் இடிந்து தொழிலாளி பலி

கோவை சித்தாபுதுார் ஹரிபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகர், 40. கூலித்தொழிலாளி. தனது தாய் சரஸ்வதியுடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். இரவு, 12:00 மணியளவில் வீட்டின் மண் சுவர் மேற்கூரையுடன் இடிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் ராஜசேகர் உடல் நசுங்கி பலியானார். சரஸ்வதி சிகிச்சை பெற்று வருகிறார்.

தம்பதிக்கு ஜாமின் மறுப்பு

கோவை, கிராஸ்கட் ரோட்டிலுள்ள ஒரு நகை கடையில் நான்கு சவரன் நகை திருடிய ஆலப்புழாவை சேர்ந்த சுதீஷ்,38, ஷானி,31, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை ஜே.எம்:2 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த மாஜிஸ்திரேட், இருவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

சிறுமிக்கு டெங்கு

கோவை நஞ்சுண்டாபுரம் ஸ்ரீபதி நகரை சேர்ந்த, 11 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பரிசோதனையில் அவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அதேபோல், திருப்பூரை சேர்ந்த 20 வயது இளம்பெண் உள்பட, 7 பேர் டெங்கு பாதிப்பினால் கோவை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதுமலை திறப்பு

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல கடந்த மார்ச், 15 முதல் தடை செய்யப்பட்டது. வாகன சவாரி, யானை சவாரி உள்ளிட்டவையும் ரத்துசெய்யப்பட்டன. வனத்துறை சுற்றுலா விடுதிகளும் மூடப்பட்டன.இந்நிலையில், ஒன்பது மாத இடைவெளிக்கு பின், இன்று முதல் முதுமலை மீண்டும் திறக்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகள் இன்று முதல் அனுமதிக்கப்பட உள்ளனர்.

மண் அள்ளிய மூவர் கைது

கோவை, கணியூர் அடுத்த புதுப்பாளையம் - தண்ணீர் பந்தல் சாலை அருகே உள்ள குட்டையில் இருந்து நேற்றிரவு மூன்று டிப்பர் லாரிகளில் சிலர் மண்ணை அள்ளி கொண்டிருந்தனர். அப்பகுதி மக்கள் மூன்று லாரிகளையும் சிறை பிடித்தனர். கருமத்தம்பட்டி போலீசார் மூவரை கைது செய்தனர்.

பறிமுதல் வாகனம் ஏலம்

கோவை மாவட்ட போலீசார் மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து நான்கு சக்கர, 3 மூன்று சக்கர, 71 இரு சக்கர வாகனங்கள், என, 79 வாகனங்களை நேற்று ஏலத்தில் விட்டனர். ஏலத்தொகை, ரூ.16.08 லட்சம் மற்றும் சரக்கு, சேவை வரி, ரூ.1.63 லட்சம் என, மொத்தம், ரூ.17.71 லட்சம் அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.

கலெக்டர் ஆலோசனை

மத்திய, மாநில பணியாளர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம், நேற்று கலெக்டர் அலுவலக அரங்கில் நடந்தது. கலெக்டர் ராஜாமணி தலைமை வகித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துராமலிங்கம், தேர்தல் ஆர்.டி.ஓ., சுந்தர்ராமன் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர். பா.ஜ., பூத் கமிட்டி கூட்டம் மதுக்கரையை அடுத்த நாச்சிபாளையத்தில் பா.ஜ., பூத் கமிட்டி கூட்டம் கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடந்தது.

10 ஆயிரம் புதிய வாக்காளர்களை சேர்ப்பது, சட்டசபை தேர்தலைஎதிர்கொண்டு முழு நேரமாக பணியாற்ற விருப்பமுள்ளவர்களை கண்டறிவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்

.ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

கோவை : பொள்ளாச்சி ரோட்டில் ஈச்சனாரி மேம்பாலம் அடுத்து, பை-பாஸ் ரோடு சந்திப்பு பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால், இவ்விடத்தில் மேம்பாலம் கட்டக்கோரி ம.தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X