புதுவைக்கு கிரண்பேடி வேண்டாம்!

Added : ஜன 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி:புதுச்சேரி கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி, காங்., கூட்டணி கட்சியினரின் தொடர் தர்ணா, துவங்கியது.புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை, மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, காங்., மற்றும் கூட்டணி கட்சிகள், கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்தன. புதுச்சேரி கலெக்டர் பூர்வா கார்க், கவர்னர் மாளிகையை சுற்றிலும், 500 மீட்டர் துாரத்திற்கு போராட்டம்,

புதுச்சேரி:புதுச்சேரி கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி, காங்., கூட்டணி கட்சியினரின் தொடர் தர்ணா, துவங்கியது.

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை, மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, காங்., மற்றும் கூட்டணி கட்சிகள், கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்தன. புதுச்சேரி கலெக்டர் பூர்வா கார்க், கவர்னர் மாளிகையை சுற்றிலும், 500 மீட்டர் துாரத்திற்கு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்தார்.இதனால், காங்., கட்சி போராட்ட இடத்தை, மறைமலையடிகள் சாலைக்கு மாற்றியது.

நேற்று காலை துவங்கிய தர்ணாவில், முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், கூட்டணி கட்சி எம்.பி., - எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான தி.மு.க., பங்கேற்கவில்லை. தர்ணாவில் பங்கேற்றவர்களுக்கு, மதியம் சிக்கன் பிரியாணி வழங்கினர்.

தர்ணாவில், முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:புதுச்சேரியை, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு பார்க்கிறது. மாநில அரசு சார்பில், மத்திய அரசை வலியுறுத்தியும், போதிய நிதி வழங்கவில்லை. கொரோனா தடுப்பு பணிக்கு, மாநில அரசு நிதியை வழங்குகிறோம்.அமைச்சரவையின் முடிவுகளை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு, அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலில், கவர்னர் கிரண்பேடி ஈடுபடுகிறார்.

மதுபான வரியை குறைக்க விடாமல் மாநில வருவாயை பெருக்க தடையாக உள்ளார். சர்வாதிகாரி போல செயல்படுகிறார்.மத்திய அரசும், கவர்னரும் சேர்ந்து, மாநில அதிகாரத்தை குறைத்து வருகின்றனர். புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கும் வேலையை, பிரதமர் மோடி, கவர்னர் கிரண்பேடி செய்து வருகின்றனர். கவர்னர் கிரண்பேடியை புதுச்சேரியை விட்டு வெளியேற்றும்படி, பிரதமருக்கு கோரிக்கை வைக்கிறேன்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X