சென்னை:நாகர்கோவில் -- கோவை சிறப்பு ரயில், வள்ளியூரில் நின்று செல்லும்.
நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு, தினமும் காலை, 7:35 மணிக்கும்; கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு, காலை, 7:25க்கும், எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில், நாகர்கோவிலுக்கு அடுத்து, நாங்குநேரியில் தான் நின்று செல்கிறது. இடையில் உள்ள, வள்ளியூரில் நிறுத்தம் கிடையாது.வள்ளியூரில் நின்று செல்ல வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, நாகர்கோவிலில் இருந்து செல்லும் போது, காலை, 8:07க்கும், கோவையில் இருந்து வரும் போது, இரவு, 7:04க்கும், வள்ளியூரில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE