மருத்துவரின் மனிதாபிமானம்
சீனாவின், தென்மேற்கு மாகாணமான செங்க்யூ நகரில், இளைஞர் ஒருவர் திடீரென பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். தகவலறிந்து அங்கு சென்ற மருத்துவர், தன்னிடம் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால், நோயாளியை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து இழுத்துச் சென்றார். கடும் பனிப்பொழிவுக்கு இடையிலும், மலைப்பாங்கான இடத்தில் இருந்து மனம் தளராமல் இழுத்துச் சென்று, சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தார். டாக்டரின் மனிதாபிமான செயலால் நோயாளி தற்போது நலமுடன் உள்ளார். பலரும் மருத்துவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
விவசாயி வினோத திருமணம்
சட்டீஸ்கர், ஜகதல்பூரை சேர்ந்த மவுரியா என்ற விவசாயி, சத்தாரி, ஹசீனா என்ற இரு பெண்களை காதலித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன், உறவினர்கள் முன்னிலையில், இரு பெண்களையும் மவுரியா திருமணம் செய்தார். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
வைரலாகும் பாம்பு சண்டை
ஆஸ்திரேலியா, ஸ்கொட்டியா வனவிலங்கு சரணாலயத்தில், கொடிய விஷமுடைய முல்கா பாம்புகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சண்டையிட்ட காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பதிவு செய்த, சூழலியல் நிபுணர் தாலி மொய்ல் என்பவர், 'ஆண் பாம்புகள் சண்டையிட்டு, ஆதிக்கத்தை நிரூபிக்க முயற்சிக்கிறது. பெண் பாம்புகளுக்கு துணையாக இருப்பதற்கான உரிமைக்காகவே இப்படி சண்டையிடுகின்றன. இந்த நடத்தை சற்றே வித்தியாசமானது'என குறிப்பிட்டுள்ளார்.
மீன்பிடிக்க பொக்லைன்
பொதுவாக, மீன்களை, துாண்டில் மற்றும் வலை வீசி பிடிப்பவர்களைதான் பார்த்திருப்போம். ஆனால், இங்கே ஒரு குறும்புக்கார இளைஞர் பொக்லைன் இயந்திரம் கொண்டு மீன் பிடித்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி பலரையும் கவர்ந்துள்ளது. வீடியோவில், ஒரு குளத்தின் கரையில் பொக்லைன் இயந்திரத்தை இளைஞர் இயக்கி கொண்டிருக்கிறார். அப்போது, குளக்கரைக்கு அருகில் மீன் நீந்துவதை கண்டு உடனே கொக்கி போட்டு லாவகமாக பிடித்து கரையில் போடுகிறார். இதைபார்த்து, 'நெட்டிசன்'கள் பலரும் வியப்பான கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE