தமிழக தலைவர்களின் டுவிட்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக தலைவர்களின் 'டுவிட்'

Added : ஜன 09, 2021
Share
கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் மூலம் பறித்தது போல், முதுநிலை சட்டக் கல்விக்கும் பி.ஜி.சி.இ.டி.எல்., நுழைவுத் தேர்வா. மாநில உரிமைகளுக்கு எதிரான சமவாய்ப்பை பறித்திடும் இந்த அறிவிப்பை இந்திய பார் கவுன்சில் திரும்பப் பெற்று மாநில சட்டக் கல்லுாரிகளின் தரத்தை உயர்த்திட வேண்டும்.- ஸ்டாலின், தி.மு.க., தலைவர்.நாகையில் இளம்பெண்ணை இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக

கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் மூலம் பறித்தது போல், முதுநிலை சட்டக் கல்விக்கும் பி.ஜி.சி.இ.டி.எல்., நுழைவுத் தேர்வா. மாநில உரிமைகளுக்கு எதிரான சமவாய்ப்பை பறித்திடும் இந்த அறிவிப்பை இந்திய பார் கவுன்சில் திரும்பப் பெற்று மாநில சட்டக் கல்லுாரிகளின் தரத்தை உயர்த்திட வேண்டும்.

- ஸ்டாலின், தி.மு.க., தலைவர்.

நாகையில் இளம்பெண்ணை இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான செய்தி
அதிர்ச்சியளிக்கிறது. பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக 2013ல் ஜெயலலிதா
அறிவித்த13 அம்சத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். அதன்மூலம் பெண்கள்
பாதுகாப்பாக நடமாடுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
--ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்.

மூன்று கருப்பு வேளாண் சட்டங்களை கொண்டு வந்து சர்வாதிகார ஆட்சி நடத்தும் பிரதமர் மோடி, அதை தட்டிகேட்காமல் அடிமை அரசு நடத்தும் முதல்வர் பழனிசாமிக்கு விரைவில்
மக்கள் பாடம்புகட்டுவார்கள்.

- கே.எஸ்.அழகிரி, தமிழக காங்., தலைவர்.

அஞ்சலகக் கணக்கர் பணியிடங்களுக்கான தேர்வை தமிழ் உட்பட மாநில மொழிகளில் நடத்தாவிட்டால், பெரும் எதிர் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

- சீமான், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்.

அஞ்சல் துறையில் கணக்கர் பதவிகளுக்கான தேர்வுகள் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

- ஜவாஹிருல்லா, ம.ம.க., தலைவர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X