பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: மக்களை காவு வாங்கலாமா?

Updated : ஜன 09, 2021 | Added : ஜன 09, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:சீனிவாசன், கண்டனுார், சிவகங்கை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தனி மனித இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி, கைகளை அடிக்கடி கழுவுதல் என, கொரோனா தடுப்பு வழிமுறையை தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டும் என அரசும், சுகாதாரத் துறையும் அறிவுறுத்தி வருகிறது.அதே அரசு தான்,


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


சீனிவாசன், கண்டனுார், சிவகங்கை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:



latest tamil news


தனி மனித இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி, கைகளை அடிக்கடி கழுவுதல் என, கொரோனா தடுப்பு வழிமுறையை தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டும் என அரசும், சுகாதாரத் துறையும் அறிவுறுத்தி வருகிறது.அதே அரசு தான், டாஸ்மாக் பார், 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர் செயல்படவும் அனுமதி அளித்துள்ளது.தியேட்டரில், 100 சதவீத பார்வையாளர் அனுமதி என்பதில், திரை உலகினரைத் தவிர, தமிழகத்தில் உள்ள மற்ற அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசும், இந்த அனுமதி தவறானது எனக் கூறியுள்ளது. இரண்டாவது அலை, உருமாறிய கொரோனா என, மேலை நாடுகளில் வேகமாக நோய் தொற்று பரவி வரும் நிலையில், தியேட்டருக்கு, 100 சதவீதம் பார்வையாளர் அனுமதி என்பது, நிச்சயம் பேராபத்தை விளைவிக்கும்.நம் நாட்டில், வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு அனுமதி அளிக்கப்படவில்லை. தமிழக அரசு மட்டும், ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது?சினிமா துறையினரின் வாழ்வாதாரத்திற்காக, தியேட்டரில், ஓர் இருக்கை இடைவெளியில், 50 சதவீத பார்வையாளர் என்பது கூட, ஏற்றுக் கொள்ளக்கூடியதே.இடைவெளியில்லாமல், குளிர்சாதன வசதியுடன், மூன்று மணி நேரம் மூடிய அறைக்குள் கூட்டம் நிறைந்திருந்தால், நிச்சயம் கொரோனா பரவும்.அதுவும் விஜய், சிம்பு போன்ற பெரிய நடிகர்களின் படம் எனும்போது, எதை பற்றியும் கவலைப்படாமல் இளைஞர்கள் கூட்டம், திருவிழா போன்று, தியேட்டருக்குள் முண்டியடித்து நிற்கும்.

மாதந்தோறும் சுகாதாரம், உள்ளாட்சித் துறையினர், கலெக்டர்களுடன் கூட்டம் போட்டு ஆலோசனை கேட்டு, ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கும் முதல்வர், தியேட்டர் விஷயத்தில் மட்டும், நடிகர் விஜய் ஆலோசனையை மட்டும் கேட்டு, இதை அறிவித்தது ஏன்?இத்தனை நாளாக மருத்துவர், செவிலியர், துப்புரவாளர் மேற்கொண்ட உழைப்பு வீணாக போவதற்கா?நடிகர்கள், தங்களின் படம் வசூலை குவிக்க வேண்டும் என்பதற்காக, ரசிகர்களின் உயிரை பணயம் வைக்கின்றனர். என்ன ஒரு சுயநலம்!


latest tamil news


மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரமான பள்ளிகள் கூட, ஓராண்டாக மூடியிருக்கும் நிலையில், பெற்றோரிடம் ஒருமுறைக்கு இருமுறை கருத்து கேட்கும் தமிழக அரசு, தியேட்டர் மற்றும் பார் திறப்பு விஷயத்தில், 100 சதவீதம் ஆர்வம் காட்டுகிறதே!'நாட்டு மக்கள் நாசமாக போனால், நமக்கென்ன; சினிமா தான் முக்கியம்' என நினைக்கும் அரசியல்வாதிகளை, மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஜன-202123:44:21 IST Report Abuse
யோகேஸ் முண்டியடித்து முதல் மூன்று நாட்கள் வரும் தீவிர ரசிகர்கள் தானே கோடிகளை குவிய செய்வார்கள்.கோடிகள் முக்கியம் பிகலு.குவியும் கோடிகளுக்கு முன்னால் குவியும் ரசிகர்கள் பிணம்கள் ஒரு பொருட்டே இல்லை.
Rate this:
Cancel
vijai -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜன-202122:49:55 IST Report Abuse
vijai என்னது சிம்பு பெரியநடிகரா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
09-ஜன-202121:19:18 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy நாட்டு மக்கள் நாசமாக போனால், நமக்கென்ன சினிமா தான் முக்கியம். மக்களை திசை திருப்பும் கருவி சினிமா தான். கோடிகள் எங்கெல்லாம் புழங்குகிறததோ அங்கெல்லாம் அரசியல்வாதி இருப்பான், அங்கே ஆளும்கட்சி எதிர்கட்சி என்ற பேதம் இருக்காது, பெட்டி ரெண்டு பக்கமும் சென்றிருக்கும். இந்த ஜனநாயக நாட்டில் அரசை குறை கூறி புலம்புவதை விட்டுவிட்டு திருவாளர் பொதுஜனம் சுயமாக யோசிக்க ஆரம்பித்தாலே போதும், மற்றவை தானாக நடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X