வாஷிங்டன்: ''அமெரிக்க இணை அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள வனிதா குப்தா, அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களின் பெருமைமிகு மகளாக திகழ்கிறார்,'' என, அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள, ஜோ பைடன் புகழாரம் சூட்டியுள்ளார்.

சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடன் வெற்றி பெற்றார். முயற்சிவரும், 20ல், அமெரிக்க அதிபராக, அவர் பதவிஏற்கவுள்ளார். இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வனிதா குப்தாவை, இணை அட்டர்னி ஜெனரல் பதவிக்கு நியமித்து உள்ளார். இது குறித்து ஜோ பைடன், செய்தியாளர்களிடம் பேசியதாவது:நீதித் துறையின் மூன்றாவது உயர்ந்த பொறுப்பில், வனிதா குப்தாவை நியமித்துள்ளேன். அவர், அமெரிக்காவில், சமூக உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞர்களில், மிகவும் மதிக்கத்தக்கவர். ஒவ்வொரு வழக்கிலும், அவர் சமத்துவத்திற்காக போராடியவர்.
நீதித் துறை தவறுகளை தட்டிக் கேட்கும் உரிமைகளுக்காக வலியுறுத்தியவர்.நாடு சந்தித்த, சில கடுமையான பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, மக்களிடம் வேற்றுமையை அகற்றி, அனைவரும் ஒற்றுமையாக செயல்பட முயற்சித்தவர். நிறப் பாகுபாடற்ற சமத்துவம், பாதுகாப்பு, நம்பிக்கை ஆகியவற்றை ஏற்படுத்தும் நோக்கில், போலீஸ் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள துணை புரிந்தவர். அவரது சாதனை அசாதாரணமானது. அவரது திறமையை பறைசாற்ற, அமெரிக்க மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த, அவர் மேற்கொண்ட முயற்சி ஒன்றே போதும். உத்வேகம்பிலடெல்பியாவில் பிறந்த அவர், இந்தியாவில் இருந்து இங்கு குடியேறியவர்களின் பெருமைமிகு மகளாக விளங்குகிறார். இதை விட வேறு என்ன பெருமை வேண்டும்?இவ்வாறு அவர் பேசினார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சியில், நீதித் துறையில், சமூக உரிமைப் பிரிவில் பணியாற்றிய, வனிதா குப்தா, போலீஸ் துறையில் அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆய்வு செய்யும் பொறுப்பையும் வகித்து வந்தார்.'இளம் வயதில், குடும்பத்துடன் உணவகத்திற்குச் சென்ற போது, சில வெள்ளையர்கள், எங்களை கறுப்பர்கள் என கூறி வெளியேற்றினர். 'இந்த சம்பவம் தான், சமூக ஒற்றுமைக்கு போராடும் உத்வேகத்தை எனக்கு அளித்தது' என்கிறார், வனிதா குப்தா.இவர் நியமனத்திற்கு 'செனட்' அங்கீகாரம் அளிக்கும் பட்சத்தில், அமெரிக்காவில், இணை அட்டர்னி ஜெனரல் பதவியில் அமரும், வெள்ளையர் அல்லாத முதல் பெண் என்ற சிறப்பை பெறுவார்.வர்த்தக அமைச்சர் நியமனம்அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன், வர்த்தக துறை அமைச்சராக, கினா ரெய்மன்டோவை நியமித்துள்ளார். பாஸ்டன் நகர மேயர் மார்டி வால்ஷ், தொழிலாளர் நலத் துறைக்கும், இசபல் குஸ்மன், சிறு வர்த்தக நிர்வாகப் பிரிவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE