தமிழ்நாடு

கரும்பு விவசாயிகளுக்கான நிலைவை தொகை ரூ.24 கோடி! இழுத்தடிக்கும் தனியார் ஆலையால் பரிதவிப்பு

Added : ஜன 09, 2021
Share
Advertisement
ராஜபாளையம் : மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைவிக்கப்படும் கரும்பு விவசாயத்திற்கான நிலுவைத்தொகை ரூ.24 கோடியை தனியார் ஆலை நிர்வாகம் வழங்காததால் விவசாயிகள் பாதிப்பில் உள்ளனர். ராஜபாளையம் சுற்று வட்டாரத்தில் சேத்துார், தேவதானம், நக்கனேரி, வெங்கா நல்லுார் , ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் கரும்பு

ராஜபாளையம் : மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைவிக்கப்படும் கரும்பு விவசாயத்திற்கான நிலுவைத்தொகை ரூ.24 கோடியை தனியார் ஆலை நிர்வாகம் வழங்காததால் விவசாயிகள் பாதிப்பில் உள்ளனர்.

ராஜபாளையம் சுற்று வட்டாரத்தில் சேத்துார், தேவதானம், நக்கனேரி, வெங்கா நல்லுார் , ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. தண்ணீர் அதிக தேவைப்படும் நெல் விவசாயத்திற்கு மாற்றாக பராமரிப்பு அதிகம் தேவைப்படாத கரும்பு சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒராண்டு பயிரான கரும்பை விவசாயிகள் மாவட்ட எல்லையில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்ப ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதை ஆதாரமாக வைத்து வங்கி கணக்கு தொடங்கி பயிர்க்கடன் உள்ளிட்ட முன்பணம் பெற்று பணிகளை மேற்கொண்டனர். கரும்பு விளைவித்து 10வது மாதத்திற்கு பின் ஆலை நிர்வாகத்தினர் மூலம் கரும்பினை வெட்டி சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வந்தனர்.

தற்போது ஆலைக்கு கரும்பினை அனுப்பி விட்டு பணத்திற்காக காத்திருக்கும் சூழ்நிலைக்கு ஆளாகி உள்ளனர் விவசாயிகள். இது தொடர்பாக விவசாயிகள் கலெக்டரிடம் முறையிடல், ஆலை முற்றுகை, அடையாள உண்ணாவிரதம், காத்திருப்பு உள்ளிட்ட பல்வேறு வகை கவன ஈர்ப்பு போராட்டங்கள் செய்தனர். இதை தொடர்ந்து 2019--20 நிலுவை தொகையை வழங்கிய ஆலை அதற்கு முந்தைய 2018--19 ஆண்டு தொகையை தற்போது வரை வழங்கவில்லை .ரூ. 24 கோடி வரையிலான நிலுவையை பட்டுவாடா செய்யாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கின்றனர்.

அடுத்தகட்ட விவசாய பணிக்கு தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி கடனாளியாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்......

கை கொடுக்கலாமே

எந்த ஒரு தொழிலிலும் பொருட்களை அனுப்பி விட்டு பணத்திற்காக ஆண்டு கணக்கில் காத்திருக்கும் சூழல் இருப்பதில்லை. ஒறாண்டு பயிரான கரும்பை ஒப்பந்தம் மூலம் கடன் வாங்கி விளைவித்து அனுப்பிவிட்டு நிலுவையை பெற ஆண்டு கணக்கில் காத்திருக்கிறோம். நன்மை தரும் விவசாய மசோதாவிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வரும் அரசியல் கட்சியினர் அருகில் உள்ள விவசாயிகளின் பிரச்னைக்கு கை கொடுப்பது இல்லை. பாலச்சந்திரன், விவசாயி, ராஜபாளையம்...........

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X