திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு டிரைவர் மணிகண்டனுக்கு பாலியல் பலாத்கார வழக்கில் 7 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட் உத்தரவிட்டது.
வடகாடு கண்ணையன் மகன் மணிகண்டன் 29. கடந்த 2013 ல் அதே பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். அப்பெண் கர்ப்பமானதும், திருமணம் செய்யாமல் தலைமறைவானார். ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அப்பெண் புகார் அளித்தார். போலீசார் டிரைவர் மணிகண்டன், உறவினர்கள் மாயக்கண்ணன், மாயகிருஷ்ணனை கைது செய்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடந்தது. நேற்று வழக்கு விசாரணையில் நீதிபதி புருேஷாத்தமன், குற்றம் நிருபிக்கப்பட்டதால் மணிகண்டனுக்கு 7 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE