கன்னிவாடி : கன்னிவாடி, செம்பட்டி பகுதியில் மழை தொடரும் நிலையில் மழைநீர் பராமரிப்பு தொடர்பான ஆலோசனைகளை வேளாண்துறையினர் வழங்கி வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முந்தைய புயல் சூழலில் கன்னிவாடி, செம்பட்டி பகுதிகளில் போதிய மழை இல்லை. மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்த மழையால், ஆத்துார் காமராஜர் நீர்தேக்கம் நிரம்பி மறுகால் பாய்கிறது.தற்போது 3 நாட்களாக பரவலாக தொடர் மழை பெய்கிறது. வாய்க்கால்களில் நீர்வரத்து ஏற்பட்டும், கன்னிவாடி நாயோடை, பெரும்பாலான குக்கிராம கண்மாய்களில் குறிப்பிடத்தக்க அளவு தண்ணீர் தேங்கவில்லை.
ஆத்துார், செம்பட்டி, கன்னிவாடி, குட்டத்துப்பட்டி, கரிசல்பட்டி, வீரக்கல், பகுதிகளில், நெல், வாழை, கொத்தமல்லி, காய்கறி சாகுபடி நடக்கிறது. சமீபத்திய மழையால் பல இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான பராமரிப்பு ஆலோசனைகளை வேளாண்துறையினர் வழங்கி வருகின்றனர். ''நெல் வயலில் அதிக நீர் தேங்காமலும், பிற சாகுபடி பகுதிகளில் மழைநீர் வெளியேறுவதற்கான வடிகால் வசதிக்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்'' என தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE