தமிழ்நாடு

போலீஸ் நடவடிக்கைகளால் திண்டுக்கல்லில் குறைந்தது குற்ற வழக்குகள்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் 2020 ல் பல்வேறு குற்ற வழக்குகள் வெகுவாக குறைந்துள்ளதாக டி.ஐ.ஜி., முத்துச்சாமி தெரிவித்தார்.மாவட்டத்தைப் பொறுத்தவரையில் டி.ஐ.ஜி., முத்துச்சாமி மற்றும் எஸ்.பி., ரவளிப்பிரியா பொறுப்பேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து அதிக கவனம்

திண்டுக்கல் : திண்டுக்கல் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் 2020 ல் பல்வேறு குற்ற வழக்குகள் வெகுவாக குறைந்துள்ளதாக டி.ஐ.ஜி., முத்துச்சாமி தெரிவித்தார்.

மாவட்டத்தைப் பொறுத்தவரையில் டி.ஐ.ஜி., முத்துச்சாமி மற்றும் எஸ்.பி., ரவளிப்பிரியா பொறுப்பேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து அதிக கவனம் செலுத்தினர்.பேஸ்டேகர் செயலி பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க ஏற்பாடு செய்தனர். 2019 ம் ஆண்டைவிட 2020 ல் வழக்குகளின் எண்ணிக்கையை அதிகரித்து குற்றச் சம்பவங்களை குறைத்துள்ளனர்.

குற்றவாளிகளை கண்டறிய தென் மண்டலத்தில் முதன்முறையாக 'பேஸ்டேகர்' செயலியை திண்டுக்கல்லில் அறிமுகம் செய்தனர். இதன் மூலம் குற்றவாளிகளை எளிதில் கண்டறிய 217 பேருக்கு பயிற்சி அளித்து பயன்படுத்தி வருகின்றனர்.2020ல் பாலியல் வழக்கில் 7 பேர், போதைப் பொருள் கடத்தல் 23, மணல் கடத்தலில் 9 என 95 பேர் குண்டாஸில் கைதாகினர்.

இது 2019 ஆண்டைவிட 16 பேர் கூடுதல். 2020 ல் மொத்தம் 52 கொலை வழக்குகள் பதிவானது. அனைத்திலும் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு 141 பேர் கைதாகினர். 2019 ஐ ஒப்பிடுகையில் 17 வழக்குகள் குறைவு.விபத்துகள் குறைவு2020 ல் கூட்டுக் கொள்ளை, வழிப்பறி, திருட்டு என 259 வழக்குகள் பதிவானது. இதில் 151 வழக்கில் குற்றவாளிகள் கைதாகினர். ரூ.1.56 லட்சம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

போதை தடுப்பு குற்றத்தில் 178 வழக்குகள் பதிவானது. இதில் ரூ.66.22 லட்சம் மதிப்புள்ள 692 கிலோ கஞ்சா பறிமுதலானது.ஆற்றுமணல் திருட்டு தொடர்பாக 194 வழக்குகளில் 284 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 2019 ஐ விட கூடுதலாக 70 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 2020 ம் ஆண்டில் 1479 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 257 பேர் மரணமடைந்துள்ளனர். 2019 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 264 விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X