பழநி : பழநி அணைகளில் நிர்வரத்து அதிகரித்து நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் விளைநிலங்களில் தென்னை, மா, கொய்யா நன்கு வளர்ந்துள்ளது. நெல் சோளம் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது.இதையடுத்து பாலசமுத்திரம் வெட்டு கொம்பை, பாலாறு அணைப்பகுதிகளில் காட்டு யானை நடமாட்டம் தொடர்கிறது. விளை நிலங்களுக்குள் புகும் யானைகள் அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. தோட்டங்களில் வசிக்கும் மக்கள் அப்பகுதியில் நடமாட அச்சமடைந்துள்ளனர்.
இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர தயங்குகின்றனர்.வனத்துறையினர், காட்டு விலங்குகளிடம் கவனமுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளனர். காட்டு யானை நடமாட்டம் அறிந்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE