வடமதுரை : வடமதுரை பகுதியில் நான்கு வழிச்சாலையில் தேங்கியுள்ள மணல் குவியலால் விபத்துகள் ஏற்படுகின்றன.
திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பத்தாண்டுகளுக்கு முன் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த ரோட்டில் துவக்க காலத்தில் இருந்த பராமரிப்பு தற்போது இல்லை.வடமதுரை நால்ரோடு சந்திப்பு, அய்யலுார், தாமரைப்பாடி, மூனாண்டிபட்டி, மோர்பட்டி உட்பட பலபகுதியில் ரோட்டில் மண் குவியல் உள்ளன. நான்கு வழிச்சாலை என்பதால் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்கின்றன. இதில் இருசக்கர வாகனங்கள் குறுகிய பாதையில் பயணிக்கின்றன.குறுகிய பாதையில் சிலஇடங்களில் மண்குவியல் தேங்கியுள்ளன. அருகில் வந்ததும் மண் குவியல் கண்டு இருசக்கர வாகன ஓட்டுனர்கள் தடுமாறுகின்றனர். அப்போது சிறிது வலது பக்கம் ரோட்டில் ஏறிச் செல்வோர் மீது விரைவு வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. எனவே,மணல் குவியலை அகற்ற வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE