பொது செய்தி

தமிழ்நாடு

புறநகரை விட மோசமான நகர்புறம்; நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி

Added : ஜன 09, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளை விட, நகர்புறங்களில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.திண்டுக்கல் 2014 ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சியானதே தவிர வசதிகள் ஏதும் முறையாக செய்யப்படவில்லை. குறிப்பாக மழை பெய்தால் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சாலைகள் அனைத்தும்

திண்டுக்கல் : திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளை விட, நகர்புறங்களில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

திண்டுக்கல் 2014 ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சியானதே தவிர வசதிகள் ஏதும் முறையாக செய்யப்படவில்லை. குறிப்பாக மழை பெய்தால் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சாலைகள் அனைத்தும் பழுதடைந்து காணப்படுகிறது. பழநிரோடு, ஏ.எம்.சி.,ரோடு, கணேஷ் தியேட்டர் ரோடு, வத்தலகுண்டு ரோடு குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.இதுபோதாதென்று சாலை விரிவாக்க பணி, பாதாள சாக்கடை பணிகளால் முக்கிய சாலைகள் முடக்கப்பட்டுள்ளன.

பணிகள் விரைவாக முடிக்கப்படவில்லை. இதனால் அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. தெருக்களில் குப்பை முழுமையாக அகற்றப்படாமல் பல தொட்டிகள் நிரம்பி வழிகின்றன.அரசு மருத்துவமனையிலிருந்து கல்லறைதோட்டம் வரையான சாலையில் மின்விளக்குகள் கூட அமைக்கவில்லை. இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. புறநகர் பகுதிகளில் கூட அடிப்படை வசதிகள் ஓரளவு நன்றாக இருக்கும் நிலையில், நகர் பகுதிகள் பாழ்பட்டு கிடக்கின்றன. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X