கொடைக்கானல் : கொடைக்கானல் வனச்சுற்றுலா தல ரோடுகளில் பிளாஸ்டிக் கழிவுகளை பயணிகள் வீசிச் செல்கின்றனர்.
பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், துாண்பாறை, குணாகுகை உள்ளிட்டவை 12 மைல் ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.உணவு, பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுவதற்கு ஆங்காங்கே வனத்துறை கூடாரங்களை வைத்துள்ளது. இருந்த போதும் சுற்றுச்சூழலில் அக்கறை இல்லாத பயணிகள் இஷ்டம் போல் ரோட்டில் வீசிச் செல்கின்றனர்.
வன உயிரின சரணாலயத்தில் வனவிலங்குகள் உள்ளன. அவற்றுக்கு இவ்வாறு வீசிச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சுற்றுச்சூழல் காவலர்கள் பணியில் இருந்தபோதும் இதுபோன்ற நிலை ஆரோக்யமானதாக இல்லை. வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE