கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ராமஜென்மபூமி தீர்த்த ேஷத்ர சேவா அறக்கட்டளையின் மாவட்ட அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது.
பாரத தேசத்தின் பண்பாடு, கலாசாரத்தின் அடையாளமாக ராமச்சந்திர மூர்த்திக்கு அயோத்யையில் சரயு நதிக்கரையில் மிக பிரம்மாண்டமாய் ஆலயம் அமைய உள்ளது. இந்த ஆலய திருப்பணிக்கு நிதி சேகரிக்க ராமஜென்மபூமி தீர்த்த ேஷத்திரம் சேவா அறக்கட்டளை உருவாக்கப்பட்டு சாமான்ய மக்களையும் திருப்பணியில் பங்கெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சியில் இத்திருப்பணிக்காக மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. பெருமாள் கோவில் ரஜபுத்திர தெருவில் அலுவலகத்தினை திருக்கோவிலுார் ஜீயர் சுவாமிகள் திறந்து வைத்தார்.
ஆர்.எஸ்.எஸ்., மாநில உடற்பயிற்சித்துறை இணை ஒருங்கிணைப்பாளர் பாலாஜி சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் மகாதேவன், ஒன்றிய தலைவர் மணிவண்ணன், நகர தலைவர் தாமோதரன், கோட்ட செயலாளர் செந்தில்முருகன், மாநில கோ சேவா பொறுப்பாளர் கல்யாண்சிங், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன். மாவட்ட இணை செயலாளர் சுரேஷ், நகர செயலாளர் நாராயணன், நகர ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்ட அனைத்து இந்து அமைப்பினர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE