கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டை அரசு தொறிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.,) மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண்குராலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு :கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 10ம் வகுப்பு கல்வித்தகுதியுடனான டிராப்ட்ஸ்மேன் பிரிவில் 2 பேர், பிட்டர் (காதுகேளாதவர் மற்றும் வாய்பேசாதவர்) பிரிவில் 14 பேர், 8-ம் வகுப்பு கல்வித்தகுதியில் வெல்டர் பிரிவில் 9 பேர், ஷீட் மெட்டல் ஒர்க்கர் பிரிவில் 6 பேர் ஆகிய இடங்கள் காலியிடங்களாக உள்ளன. இவைகளை உரிய இன ஒதுக்கீட்டில் நேரடி சேர்க்கை மூலம் நிரப்பப்பட உள்ளது.
எனவே 10-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உளுந்துார்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை வரும் 16ம் தேதிக்குள் நேரில் அணுகி பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் விபரங்களுக்கு முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், உளுந்துார்பேட்டை, போன் : 04149-222339, மொபைல் : 90801 87127 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE